3,500 டாலருக்குக் கீழ்…
தற்போதைய நிலையிலிருந்து தங்கம் விலை மேலும் குறையுமானால், அடுத்தகட்டமாக 3,500 டாலர் என்பதே தங்கத்திற்கான மிக முக்கிய ஆதரவு விலையாக இருக்கும்.
3,740 டாலர் என்ற எல்லையைத் தாண்டி தங்கத்தின் விலை இன்னும் சரியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சர்வதேச சந்தையில் அனைத்து விதமான கமாடிட்டி சந்தைகளும் விலை இறக்கத்தையே சந்தித்துள்ளன.
சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால், பெரும்பாலான பொருட்களின் விலை சரிவைச் சந்தித்து வருவதை நம்மால் காண முடிகிறது.”