எடப்பாடி பழனிசாமியின் ‘குடும்ப ஆதிக்கம்’ குற்றச்சாட்டு – யார் அந்த மூவர்? | who are the three persons, from edappaadi palanisamy family showing power in admk

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குடும்ப உறுப்பினர்களின் பேச்சை மட்டுமே கேட்பதாகவும், தனது மகனை கட்சிக்குள் முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, கட்சிக்குள் செல்வாக்கு செலுத்துவதாக கூறப்படும் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பது குறித்து எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தோம்.

மிதுன் – எடப்பாடி பழனிசாமி

மிதுன் – எடப்பாடி பழனிசாமி

மிதுன் – எடப்பாடி பழனிசாமியின் மகன்

அதிமுகவில் எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பிலும் இல்லாத மிதுன், கட்சியின் முக்கிய முடிவுகளில் மறைமுக செல்வாக்கு செலுத்துவதாக சில நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஆட்சிக் காலத்திலும், எதிர்க்கட்சி காலத்திலும் கட்சி தொடர்பான பல முடிவுகளில் அவரது ஆலோசனைகள் இடம்பெற்றதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சமீபத்தில் அதிமுக உள்கூட்டம் ஒன்றில் மிதுனை கட்சி பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எடப்பாடியிடமே முன்வைக்கப்பட்டதாகவும், அதனை கேட்ட எடப்பாடி பெரியதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் கூட தகவல் வெளியானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *