நடிகை சமந்தா தொடங்கியிருக்கும் புதிய பிசினஸ் என்ன தெரியுமா? Do you know what new business actress Samantha has started?

Spread the love

இந்த புதிய பிசினஸ் குறித்து நடிகை சமந்தா, “என்னுடைய ஆரோக்கிய வாழ்க்கையில் மாதவிடாய் காலத்தில் நாம் பயன்படுத்தும் பொருள்கள் குறித்து நாம் எவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதை நான் கவனித்தேன்.

மாதந்தோறும் நம் உடலோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் ஒரு பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது, அது நம் ஆரோக்கியத்தை எப்படிப் பாதிக்கிறது என்ற கேள்விகளை நாம் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.

ரசாயனங்களின் பாதிப்பைக் குறைத்து, பெண்களின் சௌகரியத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரும் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஜாய் (ZOY) நிறுவனத்தின் லட்சியம்தான் என்னை இதில் இணைய வைத்தது.

வெறும் தயாரிப்புகளைத் தாண்டி, சுழற்சி ஆரோக்கியம் (Cycle Wellness) குறித்த ஒரு பெரிய உரையாடலை நாம் உருவாக்க விரும்புகிறோம்.

மாதவிடாய் சுழற்சியைப் புரிந்துகொள்வது, அது பெண்களின் ஆற்றலையும் மனநிலையையும் அன்றாட வாழ்க்கையையும் எப்படிப் பாதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது, உடலுக்கு எதிராகச் செயல்படாமல் உடலின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேலை செய்வது போன்ற விஷயங்கள் இன்னும் அதிக கவனத்தைப் பெற வேண்டும்.

இந்த நிறுவனம் மூலமாக இந்த விழிப்புணர்வை உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கொண்டு சேர்க்க நாங்கள் நம்புகிறோம்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *