எதிரான சர்வே.. பிரதமர் பதவியை இழக்கும் பெஞ்சமின் நெதன்யாகு? இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல்.. | Israel Election today: Can Benjamin Netanahu win again? who will win in this polls? details here

Spread the love

International

oi-Nantha Kumar R

டெல்அவிவ்: இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலில் நீண்டகாலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு வெல்வது கடினம் என சொல்லப்படும் நிலையில் எப்படியாவது கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைக்க பெஞ்சமின் நெதன்யாகு முயன்று வரும் நிலையில் அங்குள்ள களநிலவரம் என்ன? முந்தைய சர்வேக்கள் சொன்னது என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

இஸ்ரேல் நாட்டின் நீண்டகால பிரதமராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு. இவர் 1996 -1999, 2009 – 2021 வரையும், அதன்பிறகு 2022ம் ஆண்டு முதல் இன்று வரை பிரதமராக இருந்து வருகிறார். இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவி 4 ஆண்டுகளாகும். இதனால் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது.

israel election benjamin netanyahu

இஸ்ரேல் நாடாளுமன்றம் ‘நெசெட்’ என அழைக்கப்படும். இந்நிலையில் தான் இன்று அங்கு நாடாளுமன்ற தேர்தல்நடைபெற உள்ளது. காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான போரை தொடர்ந்து இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதில் 61 இடங்களை கைப்பற்றும் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் இஸ்ரேல் வரலாற்றில் ஒரு கட்சி தனித்து ஆட்சியைபிடித்தது என்ற வரலாறு இப்போது வரை இல்லை. எப்போதுமே கூட்டணி ஆட்சி தான் அமைந்து வருகிறது. இந்த முறையும் கூட்டணி ஆட்சிக்கு தான் வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். இரவு 10 மணி வரை நடைபெறும். தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் தான் நடக்கும். இஸ்ரேல் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 73 லட்சத்து 31 ஆயிரத்து 981 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள். இது கடந்த 2022ம் ஆண்டில் நடந்த தேர்தலை ஒப்பிடும்போது 543,177 வாக்காளர்கள் அதிகமாகும்.

இது தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு முக்கியமான தேர்தலாகும். அவர் எளிதில் வெல்வது சற்று சிரமமான ஒன்றாக உள்ளது. இறுதிக்கட்ட கருத்து கணிப்புகளில் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேல் தேர்தலில் மொத்தம் 38 கட்சிகள் போட்டியில் உள்ளன. இதில் நேரடியான போட்டி என்பது சில கட்சிகளுக்கு மட்டும் தான்.

பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி பெயர் ‘லிகுட்’. தற்போதும் தனது ஆதரவு கட்சிகளுடன் களமிறங்கி உள்ளார். இவருக்கு நேரடியாக போட்டி தரும் கட்சியாக ‘யஷார்’ உள்ளது. இது புதிய கட்சியாகும். கடந்த 2025ம் ஆண்டில் தான் உருவானது. இந்தகட்சியின் தலைவராக இருப்பவர் காடி ஐசன்கோட். இவர் த2015ம் ஆண்டடு முதல் 2019ம் ஆண்டு வரை இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைமை தளபதியாக இருந்தவர். பல்வேறு கருத்து கணிப்புகளில்பெஞ்சமின் நெதன்யாகவின் கட்சியை விட இவரது கட்சி தான் அதிக இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் தேர்தல் என்பது பெஞ்சமின் நெதன்யாகு – காடி ஐசன்கோட் என்று மாறி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *