தமிழக வானிலை: இந்த வாரம் மழை வாய்ப்பு|Heat Relief Ahead: TN to See Rain, Thunderstorms Forecast

Spread the love

“ஃபேனை 12 நம்பரில் வை டி மாலா’ என்பது போல, தமிழ்நாட்டில் தற்போது வெயில் கொளுத்தி தள்ளுகிறது.

இந்த நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் குட் நியூஸைப் பகிர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த வாரம் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது…

27-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Rain Alert - மழை

Rain Alert – மழை
கோப்புப் படம்

28-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *