பெயர் சிங்கமுத்து! சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர். அதனால் அவரை குடும்பமே சிங்கம் என்றுதான் சொல்லும். அவர் சிங்கமா, இல்லை அசிங்கமா எனக் கதையைப் படிக்கப் படிக்க உங்களுக்கே புரியும்! வெறும் வீராப்பு, வெட்டி பந்தா, சவடால், அலட்டல், அகங்காரம், இவற்றின் மொத்த வடிவம் சிங்கமுத்து!
பெரிய படிப்பா என்று நீங்கள் கேட்டால், எஸ்ஸெல்சி பெயில்! அதுவும், மார்ச் செப்டம்பர் என நாலு முறை எழுதி எழுதி, நாலிலும் வெற்றிகரமாகத் தோற்றவர். அதற்கும் அலட்டலாகச் சில காரணங்கள்!
வீட்டில் இவர் மூத்த பிள்ளை. அப்பாவைச் சிறு வயதில் இவரது ஜாதகம்தான் முழுங்கியது என்று பல பேர் சொன்னதுண்டு. விதவைத் தாயார். ஒரு தம்பி; அவன் புத்திசாலி! நன்றாகப் படிப்பவன். அதனால் ஒரு செலவு இல்லாமல் ஸ்காலர்ஷிப்பில் கல்லூரிப் படிப்புக்கு இடம் வாங்கியவன். அவனுக்கும் அடுத்து ஒரு தங்கை. அவளும் புத்திசாலிதான்! அப்பா போனதால் அம்மா மங்களம், மெஸ் போல நடத்திக் கடுமையாக உழைத்துப் பிள்ளைகளை வளர்த்தாள். தம்பி மாணிக்கத்தைப் படாதபாடுபட்டுப் படிக்க வைத்தாள். சிங்கத்தையும் உள்ளூர் பெரிய மனிதர் ஒருவர் மூலம் ஒரு மில்லில் வேலைக்குச் சேர்த்தாள். சிங்கம் அங்கே தன் பொல்லாத ஜம்பத்தைக் காட்டவே, விரட்டி விடப்பட்டது. அதன் பிறகு அம்மா மற்றவர் கை, காலில் விழுந்து, கடைசியாக ஒரு ஃபேக்டரியில் சிங்கத்தை ஒட்ட வைக்கப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை!
அதற்குள் தம்பி வேலைக்கு வர, அம்மா தெளிந்தாள். மாணிக்கம்தான் என் பாரம் நீக்குற பிள்ளை எனச் சொல்ல, சிங்கம் ஆத்திரப்பட்டு வீட்டுக்கே வராமல் வெளியேறி, கொஞ்சம் திரிந்துவிட்டு, இறுதியில் வழியில்லாமல் வீட்டுக்கே திரும்பி வந்தது.
தங்கை வள்ளி, பட்டப்படிப்பு முடித்து ஒரு கார்மென்ட் கம்பெனியில் சேர, “வயசுப் பெண்ணை வேலைக்கு அனுப்பக்கூடாது’ என சிங்கம் கர்ஜித்து, இறுதியில் சில நிபந்தனைகளுடன் வெளியே அனுப்பியது. அம்மா வள்ளிக்கு வரன் பார்க்க, வந்தவர்களை சிங்கம் கடித்து குதறி, அதன்பின் இந்த வீட்டுப் பக்கமே யாரும் வராமல் போக, வள்ளியின் கல்யாணமே கேள்விக்குறி ஆக, அம்மா பொங்கிவிட்டாள்.
“இதப்பாரு உன் வெத்து அதிகாரத்தை எங்கிட்ட காட்டு! ஆனா, வள்ளி வாழ்க்கைல குறுக்கே நிக்காதே! வர்றவங்களை இப்படி நீ ஓட ஓட விரட்டினா, வள்ளி காலம் முழுக்கக் கழுத்துல தாலி ஏறாமதான் நிக்கணும். நீ அடங்கு!”
“நான் இனிமே பேசலை. அவ கல்யாணத்துக்குச் சல்லிக்காசு எங்கிட்ட எதிர்பார்க்காதே!”
“நிறுத்துடா! நீ வாங்கற ஒண்ரையணா சம்பளத்தையும் வீட்டுக்குத் தர்றதில்லை. இப்பவும் நானும் மாணிக்கமும் சம்பாதிக்கற பணத்துலதான் குடும்பம் நடக்குது. இதுல வள்ளி கல்யாணத்தை (bpage நீரஃப் லோறியா? வழிச்சுக்கிட்டுச் சிரிப்பாங்க யாராவது கேட்டா!” “நீ என்னை ரொம்ப அவமானப்படுத்தறே! உனக்கு மூத்த பிள்ளை நான். கொள்ளி வேணுமா, வேண்டாமா?”
அம்மா மங்களம் சிரித்துவிட்டாள். “அடப்போடா! நான் செத்தா கண் தானம் தரணும்னு சொல்லியாச்சு. என் உடம்பை மருத்துவ கல்லூரிக்குத் தரணும்னு உன் தம்பிகிட்ட சொல்லிட்டேன். எழுதியும் வச்சாச்சு! உன் கையால கொள்ளி வாங்கறது எனக்குப் பெருமையில்லை!”
“நீ படுத்த படுக்கை ஆகும்போது நான் தேவைப்படுவேன்!”
“ஏண்ணே இப்படிப் பேசற? அம்மா நமக்காகப் பட்ட பாடு தெரியாதா? அம்மா இல்லைன்னா நாம இந்த அளவுக்கு வந்திருக்க முடியுமா?”
“நீ என்னடா ‘மெட்டி ஒலி’ மாணிக்கமா, அம்மா புராணம் பாடறே?”
இப்படியாக அம்மாவும் மாணிக்கமும் கடனை உடனை வாங்கி வள்ளியை ஒரு அரசாங்க ஊழியருக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். அந்த நடராஜன் நல்ல மனிதன். குடும்பமும் நல்ல குடும்பம். இவர்கள் சிங்கத்தை மூடித்தான் வைத்தார்கள். ஆனால் சிங்கம் தன் வழக்கப்படி ஓவராகப் பிOP அங்கும் பேரைக் கெடுத்துக் கொண்டது. சிங்கத்தைப் பார்த்தாலே வள்ளியின் குடும்பம் தெறித்து ஓடியது. வீட்டிலும் சிங்கத்துக்குக் கெட்ட பெயர். வெளியிலும் சிங்கத்தை யாரும் மதிக்கவில்லை. இந்த நிலையில் சிங்கத்துக்கு ஒரு கல்யாணம் செய்ய வேண்டும் என அம்மா பேச்சை ஆரம்பிக்க,
“இதப்பாரு, இது என் வாழ்க்கை! அதை எப்படித் தேர்ந்தெடுக்கணும்னு எனக்குத் தெரியும். இதுல நீ தலையிடாதே!” “அம்மா, நீ உள்ளே போகாதே விட்ரு” மாணிக்கம் சொல்ல, “இல்லைடா, இவன் பேரி:9க மரியிலை என்னால் இவனை மாத்தமுடியலை! உங்க யாரையும் அவன் மதிக்கறதில்லை. மத்தவங்களைத் தூக்கி எறியற அளவுக்கு இவனுக்கு எந்த ஒரு யோக்யதையும் இல்லை. ஒருத்தி வந்துதாண்டா இவனை மாத்தணும்!”
“அம்மா, அதனாலதான் சொல்றேன், நீ தலையிடாதே! நாளைக்கு வாழ வந்தவ உன்னை நிக்க வச்சுக் கேள்வி கேப்பா. நீ அசிங்கப்படுவே! நீ சொல்றதை அண்ணன் கேக்கவும் மாட்டான்!”
“அப்படி விட முடியுமாடா மாணிக்கம்? நான் அவனைப் பெத்தவ! அவனும் எல்லாரையும் போல வாழணும்னு எனக்கு ஆசை இருக்காதா?”
“இந்த அம்மாக்களுக்கு மத்தவங்க நல்லதை எடுத்துச் சொன்னா புத்தி வராது! அவமானப்படணும்னு உன் தலைல எழுதியிருந்தா யாரால அதைத் தடுக்க முடியும்?”
அம்மா திரும்பவும் சொல்ல, “நீ எனக்குப் பெண் பார்க்க வேண்டாம். என் வாழ்க்கையை நான் முடிவு செஞ்சுப்பேன். நீ ஒதுங்கி நில்லு!”
சிங்கத்தின் கல்யாண வேட்டை தொடங்கியது. இனிதான் சுவாரசியமான கதை தொடங்கப்போகிறது.



