‘எத்தனை நாளுக்குதான் சேகர்பாபுவே…’ – அங்கலாய்த்த திமுக எம்.எல்.ஏ; சட்டமன்ற ஹைலைட்ஸ்! |“How Long Can This Continue, Sekarbabu?’ – DMK MLA Voices Frustration in Tamil Nadu Assembly | Assembly Highlights”

Spread the love

> எடப்பாடி பழனிசாமி இன்று தனது காரில் ஏறுவதற்கு பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் காரில் தவறுதலாக ஏற முயன்றார். கடந்த சில ஆண்டுகளில் எடப்பாடி இப்படி உதயநிதி காரில் ஏற முயல்வது இது இரண்டாவது முறை. ‘இன்னோவாக்கும் டிபண்டருக்கும் வித்தியாசம் தெரியலயா சாரே…’ என சட்டமன்ற வளாகத்தில் ஜாலியான கமெண்ட்களை கேட்க முடிந்தது.

> அவையை முடித்துவிட்டு முக்கிய தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அவர்கள் பக்கத்தில் ப்ரேமில் தெரியும்படிக்கு நிற்க பெரிய போட்டியே நடக்கும்.

அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக எம்.எல்.ஏக்கள், தவெக என எந்த கட்சிக்கும் இதில் வித்தியாசமில்லை. உதயநிதி பத்திரிகையாளர் சந்திப்புக்கு வரும் முன்பே ஓடி வந்து திருவையாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் மைக் முன்பு இடம்பிடித்து நின்று விட்டார்.

உதயநிதி பிரஸ்மீட்

உதயநிதி பிரஸ்மீட்

நின்றவர் ஒரு ப்ளோவில், ‘அண்ணே.. இங்க வாங்க.. எத்தனை நாள் தான் சேகர்பாபுவே…’ என அங்கலாய்த்தப்படி கூறி விட்டு கேமராக்களை பார்த்து நாக்கை கடித்து மாட்டிக் கொண்டார். அதற்குள் உதயநிதி வர உடன் சேகர்பாபுவும் வந்துவிட சங்கட சிரிப்போடு பத்திரிகையாளர் சந்திப்பில் போஸ் கொடுத்து கொண்டிருந்தார் துரை சந்திரசேகர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *