தொடர்ந்து பேசியவர், “இது தமிழர் பண்பு. வெளியில் சென்றாலும் கூட மரியாதையாக சொல்லிவிட்டு செல்வதுதான் நம்முடைய பண்பு. இன்றையில் இருந்து ஒரு புதிய பாதை, ஒரு புதிய இயக்கம், அடிப்படையில் இருந்து ஒரு புதிய பரிணாமத்தோடு பார்க்கக்கூடிய விதத்தில் தான் நம்முடைய செயல் இருக்கும். எல்லோரும் சேர்ந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை.
என்னுடைய அரசியல் பாதை எளிதானது கிடையாது. ஒரு எளிதான கிராமத்தில் பிறந்து சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். 2009-ல் நான் படிக்கும்போது தேமுதிகவில் 3 மாத காலம் இன்டன்ஷிப் செய்திருக்கிறேன். அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து பாஜகவில் இணைந்து 6 ஆண்டுகள் இருந்திருக்கிறேன்.
தற்போது தனித்துவமான இயக்கத்தை மக்கள் முன்னாடி வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 25 வயதில் விஜயகாந்தின் கட்சியில் இன்டன்ஷிப் செய்தது எனது பாக்கியம். ஒரு புதிய பாதையை உருவாக்க முடியுமா என்று 17 ஆண்டு காலம் போராடி கொண்டிருக்கிறேன். நான் பாஜகவில் இணையும் முன் எனக்கு ரஜினிகாந்த் அழைத்தார்.
எனக்கும் அவருக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. அவர் அரசியலுக்கு வர இருக்கும்போது கூட நான் அதுதொடர்பாக பேசியிருக்கிறேன். அவர் இயக்கத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது 3 விஷயங்கள் தான் எனக்கு தோன்றியது.
சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவது நல்லது. ஆனால் அவருக்கு அது நல்லது கிடையாது. கோவிட் சமயத்தில் அவருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதேபோல அண்ணாமலை பாஜகவில் இணையும்போது சாந்தோஷ் ஐயாவிடம் வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதனால் ரஜினிகாந்த் அழைத்தப்போது என்னால் வர முடியாது என்று மறுத்து மன்னிப்பு கேட்டேன்.
சில யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை சொல்கிறேன். வேறு எந்தக் காரணமும் கிடையாது. யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை சொல்கிறேன்.வேறு எந்தக் காரணமும் கிடையாது.” என்று பேசியிருக்கிறார்.