கிருஷ்ணகிரியில் அதி நவீன ரேடார் தொழிற்சாலை; விரைவில் உற்பத்தியை தொடங்கும் இஸ்ரேல் நிறுவனம்!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேடார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளதன் மூலம், இந்தியாவுக்கு மட்டுமன்றி உலக நாடுகளின் பாதுகாப்புக்கான ரேடார்களை இஸ்ரேல் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது.

இந்தியா - இஸ்ரேல் உறவு

இந்தியா – இஸ்ரேல் உறவு

இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான “இஸ்ரேல் ஏரோஸ் பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் ரேடார் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த மாதம் நடத்திய நிலையில், அடுத்த ஆண்டு ஆலை முழுமையாகச் செயல்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.ஏ.ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் டி.சி.எக்ஸ், ஈ.எல்.டி.ஏ, நிறுவனங்களுடன் இஸ்ரேலின் ஐ.ஏ.ஐ நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தக் கூட்டு நிறுவனத்தில் ரூ.850 கோடி முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 165 பேர் நேரடியாக வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். 2027-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின் இந்த ஆலையில் ரேடார் உற்பத்தி தொடங்கப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *