“என்னை நம்பி பொறுப்புக் கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ்!” – ‘டோரதி’ நிகழ்வில் நெகிழ்ந்த ரிஷிகாந்த் | Dorothy Pre-Release Event: Actor Rishikanth Shares Heartfelt Words About Director Karthik Subbaraj

Spread the love

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “டோரதி’ திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ரிஷிகாந்த், “‘டோரதி’ படம் இப்போ செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. முதல்ல கார்த்திக் சுப்புராஜ் அண்ணனுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். இவ்வளவு பெரிய பொறுப்பை என்னை நம்பி எப்படி கொடுத்தீங்கன்னு தெரியல.

கார்த்தி அண்ணன் மாதிரி ஒருத்தரைப் பார்த்துதான் ‘நாமளும் சினிமாவுக்குள்ள வரலாம்’ என்கிற நம்பிக்கையே எனக்கு வந்துச்சு. அவருக்கு நான் மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

அதைத் தீர்ப்பதற்கு முதல் படியாக இந்த ‘டோரதி’ படத்தை நான் நினைச்சுக்கிறேன்” என்றவர், ‘டோரதி’ படத்தின் வாய்ப்பு குறித்து, “திடீர்னு ஒரு நாள் கூப்பிட்டு கதை சொல்லி, நீ பண்ணனும்னு சொன்னாரு. எல்லாம் ஃபைனல் ஆனதுக்கு அப்புறம் படத்தோட பணிகளுக்காக எங்களை மதுரைக்கு அனுப்பி வச்சாரு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *