மும்பையின் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தையில் 18 மாதங்களுக்கு முன்பு எம்பசி டெவலப்மென்ட்ஸ் நிறுவனம் நுழைந்தது. மும்பை முழுவதும் உள்ள திட்டங்களில் ரூ.4,500 கோடி முதலீடு செய்வதற்கான திட்டத்தை ஜனவரி மாதம் நிறுவனம் அறிவித்தது. இது குறித்து எம்பசி டெவலப்மெண்ட்ஸ் நிறுவனர் ஜிதேந்திர விர்வானி கூறுகையில்,” எம்பசி டெராஸாவில் உள்ள ஒரு முழு கட்டிடத்தையும் தக்கர் வாங்கி இருப்பது மும்பையில் எம்பசி பிராண்ட் பெற்றுள்ள நம்பிக்கையின் வலுவான அங்கீகாரமாகும்” என்று கூறினார்.
2021 ஆம் ஆண்டில், டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி, தெற்கு மும்பையில் உள்ள நாராயண் தபோல்கர் சாலையில் ஒரு பங்களா சொத்தை 1,001 கோடி ரூபாய்க்கு வாங்கினார். மது கஞ்ச் என்று அழைக்கப்படும் அந்த பங்களா மலபார் ஹில் பகுதியில் 60,000 சதுர அடிக்கு மேல் கட்டப்பட்ட பரப்பளவில் 1.5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.
மேலும் 2023 ஆம் ஆண்டில், ஒர்லியில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் 23 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை தமானியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளால் சுமார் 1,200 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன. இதே போன்று பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் 4 மாடிகளை சேர்த்து வாங்கி இருக்கிறார் என்பது குறிஒப்பிடத்தக்கது.