நேற்று, இன்று (ஜூலை 11, 12, 2026) என இரு தினங்களாக மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2026-27 கூட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமின் ஒரு பகுதியாக, இயக்குநர் மற்றும் நடிகர் விஷால் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது விஷால், “என்னுடைய தேவி அறக்கட்டளை மூலம் படிச்ச என்னோட மகள் தீபிகா என்கிற கல்லூரி மாணவி இன்னைக்கு தனியார் கல்லூரி ஒன்றில் கல்வியில் கோல்டு மெடல் வாங்கியிருக்காங்க.
எனக்கு நான் நடிச்ச படங்களுக்கு கிடைக்குற விருதுகளை விட, இது தான் பெருமை” என்று பேசினார்.
விஷாலுக்கு சர்ப்பரைஸ் மொமெண்டாக தீபிகாவை முகாமிற்கு அழைத்து வந்திருந்தோம்.
மேடையேறிய தீபிகா, “என்னோட ப்ளஸ் 2-ல 600-க்கு 551 மார்க் வாங்கியிருந்தேன். ஆனா, எங்க குடும்பத்தால என்னை மேல படிக்க வைக்க முடியாத சூழல்.
அப்போ தான் தேவி அறக்கட்டளை மூலமா கல்லூரில சேர்ந்தேன். இப்போ நான் கோல்டு மெடலிஸ்ட். நன்றி விஷால் சார்” என்று பேசினார்.
கடலூர் விழமங்கலத்தை சேர்ந்தவர் தீபிகா. அம்மா, அப்பா இருவரும் விவசாயிகள். ப்ளஸ் 2-வில் 600-க்கு 551 மார்க் பெற்றாலும், அவரை குடும்பத்தால் படிக்க வைக்க முடியாத நிதிச் சூழல்.