“என்மீது மனைவி போட்டது பொய் வழக்கு” – காணொலி வெளியிட்டுவிட்டு 1700 அடி பள்ளத்தில் குதித்த இளைஞர் | Tragic outcome of abuse by wife: Postal employee jumps into a 1,700-foot gorge after posting a video

Spread the love

எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்குச் சாட்சியாக உள்ளனர். அவள் எங்கள் தங்க நகைகளை அணிந்துகொண்டுதான் சென்றாள். ஆனால், எங்களுடைய பொருட்களைத் திரும்ப நாங்கள் கேட்கும்போது, ​​அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் மீது எந்த அழுத்தமும் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அனைத்து அழுத்தமும் என் குடும்பத்தின் மீது மட்டுமே கொடுக்கப்படுகிறது.

என் மாமனார், தான் எனக்கு தந்தையைப் போன்றவர் என்று அடிக்கடி கூறுவார். எந்தவொரு தந்தையாவது தன் பிள்ளையின் சொத்துகளை அபகரித்து, அவனது மனநிலையைப் பாதிக்க வைத்து, அவன் மீது பொய்ப் புகார்களைப் பதிவு செய்வாரா? ஒரு தந்தை என்றால், தவறை மன்னித்து மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பார் அல்லவா?

இன்று நான் இறக்கும் நிலையில், என் பெற்றோரின் கதி என்னவாகும்? மேலும், குடும்ப வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, 16 வயதுடைய என் தம்பியின் நிலை என்னவாகும்? சட்டப் பிரிவு 498A (குடும்ப வன்முறை) தொடர்பான வழக்குகளில் 90 முதல் 92 சதவீதம் வரை பொய்யானவை மற்றும் புனையப்பட்டவை என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்தவித ஆதாரமும் அல்லது அடிப்படையுமின்றி, வெறும் வாய்மொழி குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்து இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆயுதம் பெண்ணின் கைகளுக்கும் அவரது குடும்பத்தினரின் கைகளுக்கும் செல்லும்போது, ​​அது அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

வழக்குக்கு முந்தைய சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை முழுமையான பலனைத் தருவதில்லை. தற்போதைய இளைஞர்களும் “ஜென் இசட்’ (Gen Z) தலைமுறையினரும் திருமணத்தைக் கண்டு அஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் இந்தச் சட்டம் முற்றிலும் ஒருதலைப்பட்சமாகவும் பாரபட்சமாகவும் இருப்பதாகத் தெரிகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *