Case filed against Kangana Ranaut for defamatory post on X platform calling Sonia Gandhi a ‘mysterious foreigner’-சோனியா காந்தியை மர்மமான வெளிநாட்டு நபர் என எக்ஸ்தளத்தில் அவதூறாக பதிவிட்ட கங்கனா மீது வழக்கு

Spread the love

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குறித்து பாலிவுட் நடிகையும், ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மாண்டி தொகுதி மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் சர்ச்சைக்குறிய வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மர்மமான வெளிநாட்டுப் பிரஜை எனக் குறிப்பிட்டு இருந்தார். கங்கனா ரனாவத்தின் ஒரு பதிவில், சோனியா காந்தியின் குடும்ப உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டு, இறுதியில் அவர் அரசாங்கத் தலைவராக வருவதற்கு வழி வகுக்கப்பட்டது. இது எவ்வளவு வசதியானது என்ற குறிப்புடன் தனது பதிவை முடித்து இருந்தார்.

இப்பதிவை தொடர்ந்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கேப்டன் அதுல் சர்மா நடிகை கங்கனா ரனாவத் மீது ஹிமாச்சல் பிரதேச போலீசில் புகார் செய்துள்ளார். அவரது புகாரைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் . அவர் தனது புகாரை பொலிகாஞ்ச் போலீஸ் நிலையத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கையை பதிவு செய்வதற்கு முன்பு போலீஸ் டிஜிபி அசோக் திவாரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

இதையடுத்து அதிகாரிகள் முறையான விசாரணையைத் தொடங்கினர். சர்மா நேரடியாக வந்து வாக்குமூலம் கொடுத்த பிறகு கங்கனா ரனாவத் மீது முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்மா தனது புகாரில், இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளில் சந்தேகத்தை ஏற்படுத்த கங்கனா ரனாவத்தின் பதிவுகள் முயற்சிப்பதாக இருக்கிறது. எனவே அவர் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சஞ்சய் காந்தியின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி மேனகா காந்தி குடும்ப இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை கங்கனா ரணாவத் குறிப்பிட்டு இருப்பதையும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிவுகள் அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாகவும், ஆத்திரமூட்டும் கதைகளைப் பரப்புவதற்கான திட்டமிட்ட முயற்சியாக இருப்பதாகவும் சர்மா குற்றம் சாட்டினார். இந்த பதிவு பொது விரோதத்தை தூண்டும், பொது அமைதியை சீர்குலைக்கும் மற்றும் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *