என் சொந்தக் காசு 500 ரூபா போச்சு! திமுக தேர்தல் விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகர் டெலிபோன் ராஜ் | actor telephone raj who acted in dmk election advt shares his upsets regarding party

Spread the love

“அடேங்கப்பா, நிறைய பண்ணிருக்கீங்களே, இந்த ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல சுவரே பத்தாது போல..’ என நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் வியந்து போய் பேச‌, பின்னணியில் ‘தமிழ்நாட்டின் பெருமைகள் சொல்லும் திராவிடப் பெருஞ்சுவர்’ என ஒலிக்க, மீடியா, சோஷியல் மீடியா என எல்லா இடங்களிலும் உரக்க கேட்கிறது திமுகவின் அந்தத் தேர்தல் விளம்பரம்.

‘தேர்தல் விளம்பரம் மட்டுதானா, பிரசாரத்துக்கெல்லாம் போகவில்லையா’ எனக் கேட்கலாமென ‘டெலிபோன்’ ராஜுக்கு போன் போட்டோம்.

”அட நீங்க வேற காமெடி பண்ணாதீங்க தம்பி. 2021 தேர்தல்ல இதேமாதிரி ஒரு தேர்தல் விளம்பரத்துல நடிச்சேன். அப்ப பன்னீர்செல்வம் மாதிரி கெட் அப் போடணும்னு சொன்னாங்க. உடனே ஓகே சொல்லி அந்தக் கெட்-அப் போட்டு அவரைக் கொஞ்சம் கலாய்ச்சு அந்த விளம்பரமும் வந்தது. அதிமுககாரங்க சிலர் என்னை அடிக்கவெல்லாம் வந்தாங்க.

அப்ப என்னைச் சுத்தியிருந்தவங்க ‘திமுக ஆட்சி அமைஞ்சிடுச்சுன்னா, எங்கேயோ போயிடுவப்பா’னு சொன்னாங்க. ஆட்சியும் வந்தது. நான் எங்கேயும் போகலை. எம்பாட்டுக்கு நடிச்சிட்டு இருந்தேன். இதோ அஞ்சு வருஷம் கழிச்சு திரும்பவும் தேர்தல் விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க.

சம்பளமா 5000 ரூபாய் தந்தாங்க. ஷூட்டிங் போய் வந்த காருக்கு 1500 ரூபாய் ஆச்சு. 1000 ரூபாய்தான் தந்தாங்க. என் சம்பளத்துல இருந்து 500 ரூபாய் நான் சேர்த்துக் கொடுத்தேன்.

விளம்பரம் பார்த்துட்டு இயக்குநர் வசந்தபாலன் பேசினார். ஒரு படத்துல அப்பா கேர்க்டர் தர்றேனு சொல்லியிருக்கார். அது ஒண்ணுதான் லாபம்.

telephone raj with m k stalin

telephone raj with m k stalin

விளம்பரத்துல ‘அடேங்கப்பா, இவ்ளோ பண்ணியிருக்கீங்களே’ங்கிற டயலாக் பேசினேன். பேசி முடிச்சுட்டு உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். பல விஷயங்கள் வந்து போச்சு. வெளியில சொன்னா வெக்கக் கேடுங்க. ஆனாலும் சொல்லாமவும் இருக்க முடியலை” என்றவர், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்..

“பரம்பரை திமுக குடும்பம் எங்களோடது. நாகர்கோவில்ல நான் ஆறாவது படிச்சிட்டிருந்தப்ப அங்க கலைஞர் வந்து பேசின ஒரு மேடையில் எம்.ஆ.ராதா வேஷம் போட்டு பேசினேன். திமுக கூட்டம் எங்க நடந்தாலும் அப்பா என்னைக் கூட்டிட்டுப் போவார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *