கடந்த 2024ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் அக்ஷித் பூக்யா என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் ஒருக்கிணைப்பாளராக பூக்யா செயல்பட்டார். அதில் ஐ.ஐ.டியின் லோகோ அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக பூக்யாவிற்குத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிர்வாகம் நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தது.
எனவே அந்த நெருக்கடி காரணமாக அதே ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலை குறித்து இதுவரை வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹனம்கொண்டாவில் வசிக்கும் சமூகவியல் ஆசிரியரும், பூக்யாவின் தந்தையுமான ஹேமந்த் பூக்யா தனது மகன் நினைவாக அவரிம் சொந்த ஊரில் கோயில் ஒன்றைக் கட்டி இருக்கிறார்.
இது குறித்து ஹேமந்த் அளித்த பேட்டியில், “‘கொரானா தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட லாக்டவுன் காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ என் மகன் ஆலோசனை வழங்கினான்.
அவர் தற்கொலை செய்து கொண்டால், அவர் மீது மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். போலீஸ் விசாரணையில் பல்வேறு தடைகள் இருப்பதால், அக்ஷித்தின் மரண வழக்கில் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.
இதற்காக இறுதிவரை போராட முடிவு செய்துள்ளேன். எனது மகன் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர். மனவலிமையான ஆளுமை கொண்டவர்.