கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்….உதயநிதி ஸ்டாலின்! – Kumudam

Spread the love

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று காலை திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்ட பாலைவனம் போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதலமைச்சராக இருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்குமா? இல்லை நம் தலைவர் தான் இந்த நிலைமைக்கு விட்டிருப்பாரா?

இன்றைக்கு குறுவையை காப்பாற்ற முடியவில்லை. சம்பா என்ன நிலைமை ஆகும் என்று தவித்துக் கொண்டிருக்கும் நம் விவசாயிகளின் நிலைமை குறித்து எந்தவொரு கவலையும் இல்லாமல் நிர்வாக திறனற்ற முதலமைச்சராக விஜய் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகவிற்கும் இந்த காவிரி நீர் பிரச்சனை என்பது நீண்ட காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. காவிரிக்கு குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீர்வேன் என்று முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொல்லி கொண்டிருக்கிறார். ஆனால் இதனை கண்டிக்க துப்பு இல்லாமல் கேள்வி கேட்க கூட   தைரியம் இல்லாமல் மத்திய அரசை பகைத்துக்கொண்டால் பிரச்சனை வந்து விடும் என்று இதுவரைக்கும் பாஜக என ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அந்த அளவிற்கு தைரியசாலியாக இருந்து கொண்டு இருக்கின்றார்

முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறாக சில விசயங்களை பேசியதால் இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளதுஅவருடைய இந்த பேச்சுக்கு,.வெபொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்அவர் வெளியிட்ட பதிவில்எதிர்க்கட்சித் தலைவர் என்றமாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல்வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லைதன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதலமைச்சர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.

அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருந்திருக்க முடியும்மக்கள் மத்தியில் இத்தகைய கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளனஎல்லை மீறி இழிவாக பேசியவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்அமைதி காக்க சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களை தடுக்கிறதுமாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தஞ்சையில் அவதூறாக பேசினார் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் .வெ.சார்பில் புகார் அளிக்கப்பட்டு ஐந்து பிரிவுகளில்வழக்குப்பதிவுசெய்யப்பட்டு உள்ளதுஇதுபற்றி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ.செல்வகுமார் தேசிய மகளிர் ஆணைய தலைவருக்கு புகார் மனு அனுப்பினார்அதில்உதயநிதியின் பேச்சுகாணொளியை அடிப்படையாக கொண்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதுஇதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் .வெ.மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தஞ்சை காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து  விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர். இதற்கிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முற்றிப் போய் உள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரீல்ஸ் வெறியில் உள்ளனர்.

நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் பன்னி பொய் செய்தி பரப்புகின்றனர். என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. திமுகவின் கடைசி தொண்டன் கூட கைதுக்கு பயப்படுபவர்கள் கிடையாது. காவிரி பிரச்சினையை திசை திருப்ப என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *