நடிகை அஞ்சு குரியனுக்கும், ரோஷன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது.
சமீபத்தில் மலையாளத்தின் “வனிதா’ ஊடகத்துக்குப் பேட்டியளித்தவர் தனது கணவர் ரோஷன் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், “மேட்ரிமோனி மூலமாகத்தான் எங்கள் இரு வீட்டாரும் பேசத் தொடங்கினார்கள். திருமணத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டோம்.
முதலில் ஒருவருக்கொருவர் பேசிப் பழகி, அதன் பிறகு இந்த உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கத் தீர்மானித்தோம்.
இருவருமே ஒரு புதிய நபரிடம் பேசுவதால் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியாமல் இருந்தது. ‘மூன்று மாதங்கள் அவரிடம் பேசிப் பார்த்துவிட்டு என் முடிவைச் சொல்கிறேன்’ என்று என் வீட்டில் கூறினேன்.