என் வெண்கோலுக்கு வீர வணக்கம்! – சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் தந்த உற்ற தோழன் | Tribute to My White Cane The Ultimate Symbol of Freedom and Dignity

Spread the love

விழி மட்டுமே வழிகாட்டும் என்ற தவறான கண்ணோட்டத்தைத் தகர்த்து, எத்தனையோ பார்வையற்றவர்கள் வாழ்வில் ஒளியூட்டும் வழிகாட்டியாய் நீ விண் உயர்ந்து விருட்சம் தந்து கொண்டிருக்கிறாய்!

அறிவியல் எத்தனையோ புதுமைகளைக் கொண்டுவரலாம்; ஸ்மார்ட் போன்களும், ஸ்மார்ட் கண்ணாடிகளும், ஸ்மார்ட் கெய்ன்களும் ஆயிரம் பரிமாணங்களில் உதித்தாலும், உன் எளிய வடிவத்தின் கம்பீரத்திற்கு எவையும் ஈடாகாது!

தொழில்நுட்பங்கள் எத்தனை மாறினாலும், உன்னை எவராலும் எந்நாளும் மாற்ற முடியாது.

ஆயிரம் யுகங்கள் கடந்தாலும், உன் ‘டக் டக்’ ஓசை தரும் தடையற்ற சுதந்திரப் பயணத்திற்கு இந்த உலகத்தில் வேறு எந்தக் கண்டுபிடிப்பும் மாற்றாக முடியாது!

நீ என்னைப்பெறாத தாய் இல்லை; இல்லை, என் உயிர் உள்ளவரை என் உற்ற தோழன் நீ!

உனக்கு நன்றி சொல்ல இந்தப் பிறவி எனக்கு நிச்சயம் போதாது!

நீ நான்கு மடிப்புகளாய், ஐந்து மடிப்புகளாய், ஆறு மடிப்புகளாய், ஏழாம் மடிப்புகளாய் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்க வேண்டும். பார்வையற்ற பெண்களின் கரங்களினூடே நீ ஒரு போர்க்கருவியாய் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்!

நான் மரணித்த பிறகும் வெள்ளை தேவதையாய் நீ என்னைச் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும்!

உலக வெண்கோல் தின விழிப்புணர்வு பதிவு.

-மு. முத்துச்செல்வி

சீனியர் மேனேஜர், இந்தியன் வங்கி.

துணைத் தலைவர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *