இதைப் பற்றி நான் யாரிடமும் பேசியதில்லை. இந்த ஹார்மோனியப் பெட்டியைப் பற்றி நான்கு வரிகளில் கவிதை சொல்ல முடியுமா?” என்று தேவா சார் கேட்டார்.
அதற்கு நான், “பட்டித்தொட்டியெங்கும் பேர் வாங்கித் தந்த பெட்டி… ஆயிரம் படப்பெட்டி, ஆயிரம் பணப்பெட்டி என் அருகில் இருந்தாலும், ஆறுதலும் தேடுதலும் தருகின்ற ஒரே பெட்டி இந்த ஹார்மோனியப் பெட்டி” என்று வாய்ஸ் நோட் அனுப்பினேன்.
அதற்குப் பதிலாக, “Love you மா” என்று அவர் பதிலளித்தார். இன்று அந்த ஹார்மோனியப் பெட்டி ஐஸ் பெட்டியில் இருப்பதைப் பார்க்கும்போது மனம் கலங்குகிறது.
கானாவின் காதலன் காற்றில் கலந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.