எப்போதாவது ஒன்றிரண்டு சிகரெட் பிடிப்பதில் ஆபத்து இல்லைதானே? | There’s no harm in smoking just one or two cigarettes occasionally, right?

Spread the love

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரெட் மட்டும் பிடிப்பவர்களுக்கு?

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகள் மட்டுமே பிடிப்பவர்கள், தங்களைப் புகைப்பவர்கள் என்றே நினைத்துக்கொள்ளாமலும் இருக்கலாம்.
அதிகமாகப் புகைப்பவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான சிகரெட்டுகளைப் புகைப்பது, புகைக்கு வெளிப்படும் அளவைக் குறைக்கிறது. ஆனால், அதனால் புகைப்பழக்கம் தீங்கு இல்லாததாகிவிடாது. அதிக அளவில் புகைப்பவர்களுக்கு மட்டுமே ஆபத்து உள்ளது என்றும் அர்த்தமில்லை.

புகைப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்பவர்களுக்கு, சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது முழுமையாக நிறுத்துவதற்கான ஒரு படியாக இருக்கலாம். ஆனால், இறுதி இலக்கு புகைப்பழக்கத்தை முழுமையாக நிறுத்துவதாக இருக்க வேண்டும்.

புகைப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்பவர்களுக்கு, சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது முழுமையாக நிறுத்துவதற்கான ஒரு படியாக இருக்கலாம்

புகைப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்பவர்களுக்கு, சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது முழுமையாக நிறுத்துவதற்கான ஒரு படியாக இருக்கலாம்

அவ்வப்போது மட்டும் புகைப்பவர் என்ன செய்ய வேண்டும்?

புகைப்பழக்கம் தினசரி பழக்கமாக மாறும் வரை காத்திருக்காமல், அதை நிறுத்த முடிவு செய்யுங்கள். நீங்கள் அவ்வப்போது மட்டும் புகைப்பவராக இருந்தாலும், இப்போதே நிறுத்துவது புகையிலைப் புகைக்கு மேலும் வெளிப்படுவதைத் தவிர்க்க உதவும்.

புகைப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்து, அது கடினமாக இருந்தால்,  மருத்துவ  நிபுணரின் (Healthcare professional) ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும். 


டாக்டர் சுரேஷ் சாகதேவன்:

Interventional Pulmonology, Gleneagles Hospital Chennai.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *