Sports
oi-Yogeshwaran Moorthi
வாஷிங்டன்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய 4 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. இதனால் கால்பந்து ஃபீவர் உலகம் முழுவதும் பற்றி கொண்டுள்ளன. இந்த நிலையில் சர்வதேச அளவில் டாப் 10 பட்டியலில் இருக்கும் கால்பந்து வீரர்கள் யார் என்பதை கால்பந்து வீரர்களுக்கான தொழில்முறை கூட்டமைப்பான பிஎஃப்எஸ்ஏ வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே தான். 2024ஆம் ஆண்டு முதல் ரியல் மேட்ரிட் கிளப் அணிக்காக 5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டார். லா லிகா தொடரின் முதல் சீசனிலேயே 39 போட்டிகளில் விளையாடி 43 கோல் மற்றும் 8 அசிஸ்ட் செய்துள்ளார். ஃபார்வர்ட் பொசிஷனில் இன்றைய தேதி கிலியன் எம்பாப்பேவை அடிக்க இன்னொரு வீரர் கிடையாது.

இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் ஸ்பெயின் அணியின் லாமின் யமால். 6 வயதிலேயே பார்சிலோனா அணியால் கண்டறியப்பட்ட இவர், 15 வயதில் அறிமுகம் செய்யப்பட்டார். 18 வயதாகும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான பாலன் டி ஆர் விருது பட்டியலில் ரன்னர் அப் இடத்தை பிடித்து சாதனை படைத்தவர்.
தொடர்ந்து 3வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இருக்கிறார். இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் ஆல் டைம் லீடிங் கோல் ஸ்கோரர். ஆர்சனல் அணியால் உடல்தகுதி இல்லை என்று சிறுவயதில் நிராகரிக்கப்பட்டவர். ஆனால் ஹாரி கேனின் விஸ்வரூஒம் 2014 சீசனில் தான் அனைவருக்கும் தெரிய வந்தது. இப்போது பண்டஸ்லிகா தொடரில் பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி வருகிறார்.
4வது இடத்தில் இருப்பவர் பிரான்ஸ் அணியின் உஸ்மான் டெம்பெல். ஏற்கனவே ஃபிஃபா உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக் தொடர், பாலன் டிஆர் விருதுகளை வென்றவர். 2014ஆம் ஆண்டு தொடங்கிய இவரின் பயணம், தற்போது பிஎஸ்ஜி அணியில் சிறப்பாக அமைந்துள்ளது. கடந்த சீசனில் மட்டும் 33 கோல், 15 அசிஸ்ட் செய்துள்ளார். பிஎஸ்ஜி அணியில் இணைந்த பின் முழுக்க முழுக்க ஃபார்வர்ட் பொசிஷனில் விளையாடி வருகிறார்.
5வது இடத்தில் பிரேசில் அணி வீரர் ரஃபின்ஹா. சீனியர் வீரரான இவர், பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருபவர். கடந்த சீசனில் 20 போட்டிகளில் விளையாடி 11 லா லிகா கோல்களை ஆடித்துள்ளார். பிரேசில் மற்றும் பார்சிலோனா அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்தப் பட்டியலில் 6வது இடத்தில் இருப்பவர் பிரேசில் அணியின் வினிஷியஸ் ஜூனியர். வேகம், ட்ரிபிளிங்கில் வினிஷியல் ஜூனியருக்கு இப்போது யாரும் இணை கிடையாது. 18 வயதில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர். சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லிகா கோப்பைகளை வென்றவர். உலகின் மிகவும் ஆபத்தான விங்கர் வினிஷியஸ் ஜூனியர்.
தொடர்ந்து 7வது இடத்தில் ஜார்ஜியா நாட்டின் கிவிச்சா க்வரத்சேலியா இருக்கிறார். பிஎஸ்ஜி அணியின் அபாயகரமான விங்கர். இவர் களத்தில் இருந்தாலே ஆட்டம் பரபரப்பாகவே இருக்கும். ட்ரிபிளிங் செய்வதில் வல்லவர். ஜார்ஜியா தேசிய அணிக்காக விளையாடி வரும் இவர், அந்நாட்டு அணியை தனியாளாக நின்று உயர்த்தி வருகிறார்.
8வது இடத்தில் பிரான்ஸ் அணியின் மைக்கேல் ஒலிசே இருக்கிறார். ஜெர்மனியின் புண்டஸ்லிகா தொடரில் பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் மட்டும் அந்த அணிக்காக 29 போட்டிகளில் விளையாடி 13 கோல் மற்றும் 18 அசிஸ்ட் செய்துள்ளார்.
9வது இடத்தில் இருப்பது ஸ்பெயின் அணியின் பெட்ரி. மிட் ஃபீல்டரான இவர், பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். மிட் ஃபீல்டரில் இவரின் கட்டுப்பாடு, ட்ரிபிள் செய்து பாஸ் செய்வதில் கில்லாடி.. பார்சிலோனா அணிக்காக 150 போட்டிகளில் இளம் வயதில் விளையாடிய வீரர் என்ற மெஸ்ஸியின் சாதனையையே முறியடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் 10வது இடத்தில் நார்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் இருக்கிறார். 5 வயதிலேயே கால்பந்து விளையாட்டுக்குள் வந்தவர். 2022ஆம் ஆண்டு முதல் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிவேகமாக 30 கோல்களை அடித்து அசத்தியவர். நார்வே அணிக்காக 48 போட்டிகளில் 55 கோல்களை அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் மெஸ்ஸி 14வது இடத்திலும், ரொனால்டோ 15வது இடத்திலும் இருக்கின்றனர்.