“எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்.!” – மு.க.ஸ்டாலின் பகிர்வு | dmk stalin praises duraimurugan in his family function

Spread the love

முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் இல்லத் திருமண விழா இன்று (நவ.1) சென்னையில் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தத் திருமண விழாவில் துரைமுருகன் குறித்து பேசிய ஸ்டாலின், ” தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தப்போது அந்த ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் அண்ணன் துரைமுருகன்.

சட்டமன்றத்தில் சிறப்பாக பேசக்கூடியவர். சட்டமன்றத்தில் தன்னுடைய அழுத்தத்தை எடுத்து சொல்லக்கூடியவர். அன்றைய அதிமுக ஆட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்று சொல்லி தண்டனைக் கொடுத்தது.

அந்தத் தண்டனையை கலைஞர் கழக பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தி இடி, மின்னல், மழை என்ற தலைப்பில் பேசச் சொல்லி தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரச் சொன்னார். மின்னல் என்ற தலைப்பில் அண்ணன் துரைமுருகன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் இன்றைக்கும் தமிழ்நாட்டில் உள்ளத் தெருக்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *