மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மீன்பிடி வளர்ச்சி குறித்து அதன் மீன்வளத்துறை இயக்குநர் ஓர் அறிக்கையை அப்போதைய அரசுக்கு சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் சுருக்கமான விவரங்கள் :
1. மேட்டூர் நீர்த்தேக்கம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் நான்காவது பெரிய அணையாகும். 60 சதுர மைல் பரப்பளவில் நீர் தேங்கி நிற்பதும், அணையின் சராசரி ஆழம் 50 அடியாகவும் இருக்கிறது.
2. அணை கட்டப்பட்ட காவிரி ஆற்றில் நிறைய மீன்வளம் இருப்பது அனைவரும் அறிந்ததே!
3. 1919 -ல் “கர்னல் ரிவர்ட் கர்னாக்” என்ற பிரிட்டிஷார் 119 பவுண்டு எடையுள்ள “மஹசீர்” என்ற வகை மீனை தற்போது அணை அமைந்திருக்கும் பகுதிக்கு சற்று மேல் புறம் பிடித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. இந்த எடையை கொண்ட மீன் பிடிபட்டது இந்தியாவில் ஒரு சாதனையாக அப்போது போற்றப்பட்டது. இதோடு சேர்ந்து கார்ஃப், லேபியோ, கேட் ஃபிஷ் மற்றும் இந்திய கெண்டை வகை மீன்கள் மேட்டூர் ஏரியில் காணக் கிடைக்கின்றன.
5. கவனமாக எடுத்த ஆய்வுகளின் படி இந்த மேட்டூர் ஏரியில் சுமார் 60 வகையான மீன் இனங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொருளாதார ரீதியில் நல்ல விலை கிடைக்கக்கூடிய வகைகளாகும்.
6. மேட்டூர் அணையில் மீன் வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக இருக்குமா என்ற சந்தேகமே தேவையில்லை. ஏனெனில், இதே காவிரி ஆறு பாயும் தஞ்சையில் “வல்லம்” என்ற கிராமத்தில் ஆழமில்லாத ஒரு குளம் வெட்டி அதில் திரு. H.S. தாமஸ் என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் 1000 பவுண்ட் எடை உள்ள மீன்களை வளர்த்து விற்பனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அது அப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
7. அதே சமயத்தில் 60 சதுர மைல் சுற்றளவு நீர் கொண்ட மேட்டூர் அணையில் நல்ல உணவாகக் கூடிய பலதரப்பட்ட மீன் வகைகளை அறிவியல் பூர்வமாகவும் வளர்க்க முற்பட்டால் சுமார் 17,000 டன் மீன்கள் இதில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
8. ஜெர்மனியில் நன்றாக பராமரிக்கப்படும் ஒரு மீன் வளர்ப்பு குளத்தில் இயற்கையான உணவளித்து நல்ல மகசூல் பெறுகிறார்கள். அந்த அடிப்படையில் மேட்டூர் நீர்த்தேக்கம் ஆண்டுக்கு 3840 டன் மீன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். ஆனால், ஜெர்மனி போன்ற குளிர் பிரதேசங்களில் கோடை மாதங்களில் மட்டுமே மீன்கள் நன்கு வளரும். இந்த மீன்கள் இந்தியா போன்ற வெப்ப மண்டல பிரதேசங்களில், மகசூல் இதற்கும் அதிகமாகவே எதிர்பார்க்கலாம்.
9. மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு பவுண்டு விற்கும் விலையில் 25 சதவீதம் விலை என்று ஒரு பவுண்டுக்கு ஒரு அனா என்ற விகிதத்தில் கணக்கிட்டால் கூட குறைந்த பட்சம் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் ஒரு வருடத்திற்கு விற்று ஐந்தரை லட்சம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
10. இயக்குநர் அவர்களின் புள்ளி விவர அடிப்படையில் கணக்கிட்டால் ஆண்டுக்கு இரண்டரை கோடி வருமானம் கிட்டும். இது நிச்சயமாக அந்த அளவு விரிந்த பரந்த பகுதியைக் கொண்டது.