“எல்லா சத்தியமும் பலிக்காது தலைவரே..!” – ரஜினிகாந்த் குறித்து விகடன் விருது விழாவில் கோபிநாத் | Gopinath at Vikatan Awards: Don’t Waste Energy Trying to Defeat Someone

Spread the love

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், “விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026′ விழாவைக் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பிரமாண்டமாக நடத்துகிறது விகடன்.

‘Best Solo Creater – Male’ , ‘Best Solo Creater – Female’ , ‘Best Couple Creater’ என‌ மொத்தமாக 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

இதில், தொலைக்காட்சித் தொகுப்பாளராக விவாத மேடைகளை ஆட்சிசெய்த கோபிநாத், இன்றைய டிஜிட்டல் யுகமான யூடியூப் தளத்திலும் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறார்.

சமூகத்தின் நுட்பமான பிரச்னைகள், தனிமனித உறவுச் சிக்கல்கள், உளவியல், தன்னம்பிக்கை என அனைத்தையும் ஆழமாகவும் நேர்த்தியாகவும் கையாளும் திறன் கோபிக்கே உரியது!

‘கோபிநாத் அஃபீஷியல்’ சேனலில் தமிழ்ச் சமூகத்தின் பெருமித முகங்களான ‘சிலிக்கன் வேலி’ ஆளுமைகளை இவர் பேட்டி கண்டது இந்த வருட சென்சேஷன். எந்த ஒரு கருத்தையும் தனக்கே உரிய கம்பீரமான நடையில் இவர் பகிரும்போது, அந்தக் கருத்தை ஏற்க மறுத்தவர்கூட ஒரு கணம் அமைதியாகி சிந்திக்கத் தொடங்குவது, கோபியின் சாமர்த்தியத்தால் மட்டுமே சாத்தியம்.

டிஜிட்டல் தளத்தில் தன் பேச்சால் தொடர்ந்து தாக்கங்களை உருவாக்கிவரும் Gobinath Official சேனலுக்கு, `Sensational Channel of the Year’ விருது வழங்கப்பட்டது. விருதை பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி வழங்க, கோபிநாத் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ” வாழ்க்கையில் யாரோ ஒருவரைத் தோற்கடிப்பதற்கு உங்கள் எனர்ஜியை வீணாக்காதீர்கள்.

உங்களை மேம்படுத்திக்கொள்ள அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கிரிக்கெட் வீரர் தோனியிடம் நான்‌ கேட்க விரும்பும் கேள்வி ‘ எப்படிய்யா இப்படி இருக்க…’ , சாமானியன் ஒருவன் சரித்திரத்தில் எப்படி இடம் பிடித்தான் என்பதைப் பார்த்து வியக்கிறேன்.

இளையராஜாவிடம் , ‘ கிராமிய இசையைக் கடந்து வெஸ்டர்ன் இசையையும் அவரின் பேட்டியில் கொண்டுவர வேண்டும். சச்சின் டெண்டுல்கரிடம் , ‘ அவரிடம் கனெக்ட் செய்வதற்கு இன்னும் ஆட்கள் இல்லை ‘.

சூப்பர்ஸ்டார் ரஜினி ,’ ஒரு பேட்டியைக் குறிப்பிட்டுவிட்டு, ‘என்கிட்ட பேட்டி கேட்கிறார் சத்தியமா தர மாட்டேன் ‘ என்று ஒரு நிகழ்வில் நகைச்சுவையாகச் சொல்லி `Hatsoff’ என்றார்.

எல்லா சத்தியமும் பலிக்காது தலைவரே… நடந்தால் சந்தோஷம். நடக்கும் என்று நம்புவோம்” என்றார்.

கோபியின் அண்ணன் சர்ப்ரைஸாக மேடைக்கு வந்து பரிசு வழங்கினார். அதில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது கோபி கேட்ட Fountain Pen இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *