“பூராவும் விஜய் செய்திதான்!” உதயநிதியின் Paper Reading-க்கு பின்னணி என்ன? – Kumudam

Spread the love

சட்டசபை நிகழ்ச்சிகளை லைவ்வா போட்டாலும் போட் டாங்க, அரசியல் பக்கமே தலைவெச்சுப் படுக்காத யூத்துகள்லாம்கூட அதைப் பார்த்து ‘வைப்’ ஆக ஆரம்பிச்சுட்டாங்க. கூடவே, கொஞ்சம் உதறலும்!

‘எதிர்க்கட்சி ஏடாகூடமா கேள்வி கேட்க, ஆளுங் கட்சி புள்ளிவிபரத்தோடு பொறுப்பா பதில் சொல்ல லன்னா பொளந்து கட்டிடறாங்க… இதுக்கு காலேஜே தேவலை. ‘காகிதத்துல செய்யற கத்திக் கப்பலை கண்டுபிடிச்சது யாரு?’ன்னு கேட்டா என்னத்தச் சொல்றது? கப்பலுக்கு அடியில கத்தி இருக்காதுன்னே டைட்டானிக் பார்த்த பிறகுதான் எங்களுக்குத் தெரியும்..!’ என்கின்றனராம்

இப்படித் தெரியாதது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னே உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து, ‘பேப்பர்லாம் படிக்கிறதில்லையா?’ன்னு முதல்வர் கேட்கப் போய், இப்ப டெய்லி பேப்பர் சர்குலேஷன் எக்குத்தப்பா எகிறிடுச்சாம்! ‘லிரிக்கல் வீடியோ மாதிரி தமிழ் நியூஸ் பேப்பர்ஸையும் இங்கிலீஷ் லெட்டர்ஸ்ல பப்ளிஷ் பண்ணா நல்லாருக்கும்’னு ஜென் ஸீ கோஷ்டில்லாம் கொடி பிடிக்கறாங்களாம். அது சரி, உதயநிதி எப்படிப் படிக்கிறாரு? மிஸ்டர் கூடு வாஞ்சேரி அவரை மீட் பண்ணப் போனப்போ எதிர்க்கட்சித் தலைவர் இங்கிலீஷ் பேப்பரை இங்கிலீஷ்லயே படிச்சுக்கிட்டிருந்தார்…

“பரவாயில்லையே, செய்தித்தாள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டீங்கபோல?” என்று மிஸ்டர் கூடுவாஞ்சேரி கேட்க, “சட்டசபையில் முதல்வர் சொன்னதை கவனிக்கலையா? அதுதான் படிக்கி றேன். என்ன… பூராவும் ஜோசப் விஜய் செய்தியாவே இருக்கு!” என்று அலுத்துக்கொண்டார். “70 வயதுக்கு மேல் இருக்கிற வங்களுக்கெல்லாம் ரிட்டயர் மென்ட் என்று உங்க கட்சி சொல்லியிருக்கே.. அது பாரபட்சம் இல்லாம செயல்பாட்டுக்கு வருமா?” என்று மிஸ்டர் கூடுவாஞ்சேரி சந்தேகத்தைக் கிளப்ப… “செயல் பாட்டுக்குக் கண்டிப்பாக வரும்.

ஆனா, எ.வ.வேலு என் வயது 70 அல்ல; 60-தான். ஜாதகப்படி என் பிறந்த தேதி இதுதான். பள்ளிக் கூடத்தில் எங்க அப்பா பத்து வருஷம் கூட்டிச் சொல்லிட்டாரு’ என்று ஜாதகத்தைக் கொண்டுவந்து காண்பித்து, ‘நான்தான் மாவட்டச் செயலாளர்’ என்கிறார். பாவம், தலைவர் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்” என்றார்.
“சரி, புது மாவட்டச் செயலாளர் கள் அறிவிப்பு எப்போது? அதைச் சொல்லுங்கள்” என்று மிஸ்டர் கூடுவாஞ் சேரி கேட்க, “அதைக் கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால், மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு இளைஞர் அணி, ஜென் ஸீ அணி, மகளிர் அணி என்று 208 பேர் என்னிடம் மனு தந்திருக்கிறார்கள். அண்ணன் நேரு 110 பேரின் பரிந்துரைக் கடிதம் வைத்துக்கொண்டு காத் திருக்கிறார். துரைமுருகன் 70 பேர்… இப்படி மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு மொத்தம் 5,382 பேர் காத்திருக்கிறார்கள்” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

“சரி ‘இந்த சின்னப் பசங்கள அட்ராக்ட் பண்ற மாதிரி என்ன திட்டம் வெச்சிருக்கீங்க, அதைச் சொல்லுங்க?” என்று மிஸ்டர் கூடுவாஞ்சேரி கேட்க, “நான் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். சங்கர் இயக் கத்தில் எட்டாம் கிளாஸ் படிக்கும் மாணவன் வேடத்தில் நான். 9ஆம் வகுப்பு மாணவியாக த்ரிஷாவும், கிளாஸ் டீச்சராக நயன்தாராவும் நடிக்க இருக்கிறார்கள்.

இந்தப் படம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாகத் திரையிடப்படும்…” என்று சொல்லிக்கொண்டே போக… ‘ஜோசப் விஜய்க்கு கட்டம் சரியில்லைபோல! அவர் உடனே ஜோசியரை மாற்றுவதுதான் உத்தமம். இந்த விஷயத்தை ஆதவ் அர்ஜுனா காதில் போட்டு வைப்போம்… என்று யோசித்தவாறு புறப்பட்டார் மிஸ்டர் கூடுவாஞ்சேரி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *