‘எழும்பூரில் வெற்றிப் பேரணி; தி.நகரில் சண்டை!’ – பாலன் இல்ல போராட்டம் சண்டையில் முடிந்த பின்னணி! |”Balan Illam Protest Turns Violent? Background and Key Developments

Spread the love

இடையில் அமைச்சர் ராஜ்மோகன் போராட்ட பந்தலுக்கு பேச வந்தார். அவரையும் ஒரு குழு பேசவே விடவில்லை. கத்தி கூச்சல் போட்டு அவரை வெளியேற்றும் தொனியிலேயே நடந்துகொண்டது. போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் அந்த மாணவர்களை ‘அப்படியெல்லாம் செய்யக் கூடாது’ என தடுக்க நினைத்தும் முடியவில்லை.

இரவு 8 மணிவாக்கில் பாலன் இல்லத்தை சுற்றிய வளாகத்தில் போராட்டக்காரர்கள் 3-4 குழுக்களாக பிரிந்து தனித்தனியாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒவ்வொரு குழுவின் நோக்கமும் ஒவ்வொன்றாக இருந்தது. காம்பவுண்ட்டுக்கு வெளியே போலீசாரும் தயாராக இருந்தனர். காம்பவுண்ட்டை விட்டு கூட்டம் வெளியே வரும்பட்சத்தில் கைது செய்ய தயாராக இருந்தனர். ஒரு குழு தமிழக அரசையும் முதல்வர் விஜய்யையும் குறிவைத்து மட்டுமே கருத்துகளை பரிமாறிக் கொண்டிருந்தது.

.

இந்தப் போராட்டம் இப்படியே தொடர்ந்தால் சுமுகமாக முடிய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்ததால் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களே இரவு 11 மணிவாக்கில் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர். அதன்பிறகும் வாக்குவாதம் ஓயவில்லை. நீட் ரத்தை வாங்காமல் எப்படி போராட்டத்தை முடிப்பீர்கள் என போராடியவர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டனர். இரவு 3 மணி வரைக்கும் இந்த வாக்குவாதம் போயிருக்கிறது. இறுதியாக, ‘நீட் ரத்தை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்’ எனக் கூறி முடித்து வைத்திருக்கின்றனர். அதன்பிறகுதான் பாலன் இல்லம் காலியாகியிருக்கிறது.

SFI – DYFI போன்ற மாணவ அமைப்புகள் ஒரே நோக்கத்தை கொண்டு ஒருங்கிணைந்த தலைமையோடு முறையாக போராட்டத்தை நடத்தி சுமுகமாக முடித்திருந்தனர். பாலன் இல்லத்தில் அது நடக்கவில்லை. அங்கே வெவ்வேறு நோக்கங்களோடு கூடிய குழுக்கள் முறையான ஒருங்கிணைப்பின்றி கூடியதால், வெற்றிக் கொண்டாட்டத்தோடு முடிய வேண்டிய போராட்டம் சண்டையோடு முடிந்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *