எவ்வளவு காலம்தான் மக்கள் அநீதியைப் பொறுத்துக்கொள்வார்கள். உங்களுடைய (திமுக) சொந்த விருப்பங்களுக்காக மக்களை ஏமாற்றி இருக்கிறீர்கள்.
அதற்கான விடையைத்தான் தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். 100 சதவிகிதம் சொல்கிறோம். இது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். மக்கள் என்ன நினைத்து வாக்களித்தார்களோ அதை எங்கள் தலைவர் நிறைவேற்றுவார்” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து ஸ்டாலின் கொளத்தூர் தோல்விக்கு கமல்ஹாசன், “ஸ்டாலின் மீண்டும் போராடுவார், மீண்டும் வெல்வார்”‘ என்று பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த நிர்மல் குமார், “கமல்ஹாசன் தனிக்கட்சி வைத்திருக்கிறாரா? இல்லை திமுகவில் ஒரு அங்கமா? ரெட் ஜெயன்ட்டின் அங்கமா? என்று தெரியவில்லை. அவருடைய கருத்தை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்திருக்கிறார்.