ஏமாத்திட்டாங்க.. FIFA மீது பாயும் இஸ்லாமிய நாடுகள்.. உலகளவில் வெடித்த அர்ஜென்டினா – எகிப்து ஆட்டம்! | Islamic nations are angry against FIFA after Argentina win against Egypt in the World Cup 2026

Spread the love

Sports

oi-Shyamsundar I

சென்னை: நேற்று நடந்த அர்ஜென்டினா – எகிப்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் அர்ஜென்டினா கடைசி கட்டத்தில் நடந்த பல்வேறு திருப்பங்களால் வென்றது. இந்த ஆட்டத்தின் முடிவை தொடர்ந்து உலக அளவில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், நாடுகள் FIFA மீது பாய்ந்துள்ளன.

2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் எகிப்து அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நடுவர் முடிவுகள், இப்போது வெறும் விளையாட்டுப் புகாராக மட்டும் நீடிக்கவில்லை. அது உலகளாவிய அளவில் ஒரு மிகப்பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. அதாவது முதலில் மெஸ்ஸி ஜெயிக்க வேண்டும் என்று வேண்டும் என்றே நடுவர்கள் தீர்ப்புகளை வழங்கியதாக புகார்கள் வைக்கப்பட்டன. தற்போது.. இஸ்லாமிய நாடு ஒன்றை வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு இப்படி தீர்ப்புகள் வழங்கப்பதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன.

FIFA World Cup 2026 Lionel Messi 2026

நேற்று நடந்த ஆட்டத்தில் பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றன. அர்ஜென்டினா அணிக்குச் சாதகமாக எகிப்தின் கோல் மறுக்கப்பட்டது முதல் சர்ச்சை, அதன்பின் பெனால்டி தராமல் புறக்கணிக்கப்பட்டது இரண்டாவது சர்ச்சை, பல இடங்களில் மெஸ்ஸிக்கு ஆதரவாக முடிவுகள் எடுக்கப்பட்டது மூன்றாவது சர்ச்சை.

இப்படி தொடர் சர்ச்சைகள் மற்றும் , தவறான முடிவுகள்.. ஒட்டுமொத்த அரபு நாடுகள் மற்றும் உலகளாவிய இஸ்லாமிய சமூகத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடுப்பான இஸ்லாமிய அமைப்புகள்

பிரபல இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடகங்கள் பலவும், பன்னாட்டு கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

போட்டி முடிந்த சில மணிநேரங்களிலேயே, எகிப்து, சவூதி அரேபியா, மொராக்கோ மற்றும் கத்தார் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளின் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஃபிஃபாவுக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யத் தொடங்கின. முக்கிய இஸ்லாமிய கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அணிகளுக்குக் கொடுக்கும் அதே உரிமையையும் மரியாதையையும் எங்களுக்கும் கொடுக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகள், இஸ்லாமிய பின்புலக் கொண்ட அணிகளுக்கு உரிய உரிமையை, மரியாதையை ஃபிஃபா வழங்குவதில்லை.. இப்படிப்பட்ட ஃபிஃபாவை புறக்கணிக்க வேண்டும் என்று அவர்கள் போஸ்டுகளை செய்து வருகின்றனர்.

இஸ்லாமிய பின்புலம் கொண்ட.,. உச்சத்தை நோக்கி முன்னேறிய எகிப்து அணியின் கனவு.. நடுவர்களின் ஒருதலைப்பட்சமான முடிவுகளால் திட்டமிட்டுத் தகர்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சொதப்பல் மேல் சொதப்பல்

நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா பாக்ஸிற்குள் எகிப்து வீரர்கள் முஸ்தபா ஜிகோ மற்றும் ஒமர் மர்மூஷ் ஆகியோரின் ஜெர்சி அப்பட்டமாக இழுக்கப்பட்ட போதும் நடுவர்கள் மௌனம் காத்தது ஏன் என்ற கேள்வி மத்திய கிழக்கு நாடுகளில் எழுந்துள்ளது.

மெஸ்ஸி போன்ற ஒரு சர்வதேச கால்பந்து பிராண்ட் உலகக்கோப்பையின் அடுத்தடுத்த சுற்றுகளில் விளையாடினால் மட்டுமே ஃபிஃபாவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடிகள் வருமானம் கிடைக்கும். இதற்காகவே எகிப்து போன்ற வளரும் அரபு நாடுகளின் உழைப்பு பலிகடா ஆக்கப்படுகிறது.. என்று அல் ஜசீரா உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் விவாதங்களில் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பாரபட்சமான அணுகுமுறையை வெறும் தொழில்நுட்பத் தவறு என்று கடந்துவிட முடியாது என்றும், இதன் பின்னணியில் ஆப்பிரிக்க-அரபு நாடுகளுக்கு எதிரான மறைமுகப் புறக்கணிப்பு இருப்பதாகப் பல முன்னணி இஸ்லாமிய சிந்தனையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *