ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இருவரும் இசையமைத்திருக்கிறார்கள்.
அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.23) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அஞ்சலி, ” இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சூரி எனக்கு ஒரு நல்ல நண்பர். அவருடைய நல்ல மனதிற்கு இப்போது நிறைய சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார். சூரியின் வெற்றியை என்னுடைய வெற்றிபோல் உணர்கிறேன். இன்னும் நிறைய வெற்றிகளை அவர் அடைய வேண்டும்.