ரயிலுக்குள் AI… ஓடும்போதே தண்டவாளத்தைக் கண்காணிக்கும் ‘VELLINK’!| How VELLINK AI Monitors Railway Tracks During Train Journeys

Spread the love

ரயிலுக்குள் AI… என்ன செய்யும்?

VELLINK-ன் பிரமாண்டமான பலமே அதன் AI மற்றும் சென்சார் அமைப்புதான். ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கும்போதே, பல்வேறு சென்சார்கள் மூலம் தண்டவாளம், சக்கரங்கள் மற்றும் ரயிலின் முக்கிய பாகங்கள் தொடர்பான அனைத்துத் தரவுகளையும் நொடிகளில் சேகரிக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொழில் நுட்பக் கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிந்து, துல்லியமான பராமரிப்புப் பணிகளைத் திட்டமிட முடியும். அதாவது, பயணிகளை ஏற்றிச் செல்வதுடன் நின்றுவிடாமல், தான் செல்லும் பாதையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துப் பாதுகாக்கிறது!

எடை குறைப்பு… எனர்ஜி சேமிப்பு!

நவீன இலகுரகப் பொருட்கள் மற்றும் அதிநவீன ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வழக்கமான மெட்ரோ ரயில்களுடன் ஒப்பிடும்போது இதன் எடை சுமார் 18 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக, அதே இயக்கச் சூழலில் இழுவை ஆற்றல் நுகர்வு (Traction Energy Consumption) 10 சதவீதத்திற்கும் மேல் குறையும் என்றும் CRRC நிறுவனம் உறுதியளிக்கிறது.

பயணிகளுக்குக் கொண்டாட்டம்!

தொழில்நுட்பத்தில் மிரட்டினாலும், பயணிகளின் சொகுசு அனுபவத்திற்கும் இதில் குறை வைக்கவில்லை. தரை முதல் கூரை வரை நீளும் பரந்த கண்ணாடிச் சுவர்கள் (Floor-to-ceiling panoramic windows), நட்சத்திரக் கூரை (Starlit ceiling), கண்களைக் கவரும் ஹாலோ லைட்டிங் (Halo lighting) மற்றும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுழற்றிக் கொள்ளக்கூடிய இருக்கைகள் (Rotatable seats) என சகல வசதிகளும் இதில் உண்டு.

மொத்தத்தில், எதிர்கால மெட்ரோ ரயில் என்பது வெறும் பயணச் சாதனம் மட்டுமல்ல; தன்னைச் சுற்றியுள்ள சூழலையும் தொடர்ந்து கண்காணிக்கும் ஒரு நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு (Intelligent Transport System) என்பதை ‘VELLINK’ மிகச் சிறப்பாக நிரூபித்துக் காட்டியுள்ளது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *