ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் பிளேட் விருது: இந்திய இசைக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை! Golden Plate Award for A.R. Rahman: A historic honour for Indian music!

Spread the love

இந்த விருது ஆண்டுதோறும் சாதாரணமாக வழங்கப்படும் ஒன்றல்ல. உலக அளவில் தங்கள் துறைகளில் மகத்தான சாதனைகளைச் செய்து, வரலாற்றை மாற்றி அமைத்து, பல தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஆளுமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயரிய கௌரவம் இது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை ரஹ்மான் படைத்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

இதற்கு முன் இந்தியாவிலிருந்து சினிமாவுக்காக சத்யஜித் ரே, விளையாட்டுக்காக சச்சின் டெண்டுல்கர், பொருளாதாரத்திற்காக அமர்த்தியா சென் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய மேதைகள் மட்டுமே இந்த விருதினை வென்றுள்ளனர்.

பிரான்சிஸ் போர்டு கப்போலா (சினிமா), மாயா ஏஞ்சலோவ் (இலக்கியம்), ஹருகி முரகாமி (எழுத்தாளர்), மைக்கேல் ஜே. ஃபாக்ஸ் (நடிகர்) போன்ற உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் பெற்ற அதே மேடையில், இப்போது ரஹ்மானும் இடம் பிடித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *