கடந்த குறுவை பயிர்கால நெல்லை கொள்முதல் செய்து திறந்த வெளியில் வைத்ததால் மழை மற்றும் வெயிலில் நெல்லின் தரம் மற்றும் நெல்லின் கலர் மாறிவிட்டது . அதனை மில்கள் அரவை செய்யும் போது, அரிசி சற்று நிறம் மாறி வந்திருக்கின்றன.
ஆனால், அதிகாரிகள் வெள்ளையாகத் தான் அரிசி வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். நெல் எப்படி இருக்கிறதோ, அப்படி தான் அரிசி கிடைக்கும்.

இதனால், மில்களுக்கும், அரசாங்கத்திற்கும் சிறிய பிரச்னை நடந்து வருகிறது. இதனாலும், கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கமடைந்துள்ளது.
இந்தப் பிரச்னையை சீக்கிரம் களைந்தால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் நிலையம்… கொள்முதல் நிலையத்தில் இருந்து மில்… மில்லில் இருந்து அரிசியாக நுகர்வோருக்கு செல்லும்.
செறிவுட்டபட்ட அரிசியை மத்திய அரசு அனுப்பாததால் அரவை 4 மாதத்திற்கு நிறுத்தப்பட்டது.
இப்படி அரசாங்க தரப்பிலும் சில தவறுகளும், பிரச்னைகளும் இருக்கின்றன. அதனால், நெற்கள் அரவைக்கு போகாமல், கொள்முதல் நிலையங்களிலேயே தங்கிவிடுகின்றன.
இப்படியான அரசு தரப்பிலான பிரச்னைகளையும் சீக்கிரம் களைய வேண்டும்.