அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செயற்கை நுண்ணறிவுக்கு மிகப்பெரிய ஆதரவாளர். செயற்கை நுண்ணறிவு என்கிற பெயரை ‘சூப்பர் நுண்ணறிவு’ என்றெல்லாம் மாற்றிப் பெயரிட்டார்.
கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்த அமெரிக்க மிட் டேர்ம் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஏ.ஐ பங்குகள் அமெரிக்காவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

இது தேர்தலுக்கு முன்பான எதிர்பார்ப்பே. ஜனநாயகக் கட்சி மிகத் தீவிரமாகச் செயற்கை நுண்ணறிவை ஆதரிக்கவில்லை.
இதனால், இந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால், நிச்சயம் ஏ.ஐ பங்குகள் இறங்குமுகத்தைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான்.
அதுதான் அமெரிக்கப் பங்குச் சந்தையில் எதிரொலித்து, பெரும் சரிவைச் சந்தித்தது. செயற்கை நுண்ணறிவுக்கு ஜனநாயகக் கட்சியின் ஆதரவில்லை என்பதை மறைமுகமாக சாடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில்,
“ஒரு அதிபராக, சூப்பர் இன்டெலிஜென்ஸ் (Super Intelligence – SI) தொழில்நுட்பத்திற்கு நான் 100 சதவிகித முழு ஆதரவு அளிக்கிறேன்.