“ஏ சும்மா ஜில்லுனு..” வால்பாறை ஆற்றில் ஜாலியாக ஜல்சா! வாட்டர் கேம் விளையாடிய அந்த 13 பேர்! | Valparai elephant enjoys a jolly bath in river

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

வால்பாறை: வால்பாறை அருகே ஆற்றுப் பாலம் பகுதியில் வரிசையாக சென்ற யானைக் கூட்டம் தங்களது குட்டியுடன் ஜாலியாக குளித்து மகிழ்கின்றன. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் தற்போது காட்டு யானை கூட்டம் அதிக அளவில் தென்படுகின்றன. ஐயர்பாடி, ரொட்டி கடை, புது தோட்டம், முடிஸ், கவர்கல், சின்னக்கல்லார், பெரிய கல்லார், சிங்கோனா உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.

Valparai elephant

தற்போது கேரளாவில் இருந்து அதிகளவில் யானை கூட்டங்கள் வால்பாறை பகுதிக்கு வருகின்றன. தொடர்ந்து எஸ்டேட் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்குள் யானைக் கூட்டங்கள் வராமல் இருக்க வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

Valparai elephant

வால்பாறை வரும் சுற்றுலாப் பயணிகள் யானைகளை கண்டால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் வன விலங்குகளை தொந்தரவு செய்யக் கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சோலையார் அருகே நல்ல காத்து பகுதியில் உள்ள ஆற்றில் 13 யானைகள் குட்டியுடன் ஆற்றில் குளித்து வரிசையாக சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Valparai elephant

வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு மற்றும் 12-வது, 13வது கொண்டை வளைவுகளில் பாறைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை ஏழு மணி வரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டிருந்தது. முழுமையாக மழை நின்றதால் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் வால்பாறை செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

Valparai elephant

இந்நிலையில் இன்று காலை முதல் வால்பாறை பகுதியில் மேகமூட்டமாக இருந்து வந்தது. தற்போது திடீரென வால்பாறையில் மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தீபாவளி திருநாளுக்கு குறைந்த நாட்கள் உள்ளதால் வியாபாரிகள் மழை பெய்தால் தொடர்ந்து தொழில் பாதிக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *