விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் பிரபலங்களைத் தேர்ந்தெடுத்ததில் மாநகராட்சி ஆணையர் முற்றிலும் சரியாகவே செயல்பட்டார். தேவையற்ற பிற விஷயங்கள் இதில் கொண்டுவரப்பட்டது துரதிஷ்டவசமானது. மதச்சார்பற்ற மனப்பான்மை இருக்க வேண்டும். குடிமக்கள் இத்தகைய மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசியலமைப்பு எதிர்பார்க்கிறது. அந்த காணொளி நீக்கப்பட்டிருந்தால், அதை மீண்டும் பதிவேற்றுவது பொருத்தமானதாக இருக்கும்” என்று நீதிமன்றம் கூறியது.
இது குறித்து மும்பை மேயர் மும்பை மேயர் ரிது தாவ்டே கூறுகையில், “அந்த நடிகை எப்போதும் இந்துக்களுக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் நிலைப்பாடு கொண்டிருக்கிறார். எனவேதான் அவரை எதிர்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ரானே இது குறித்து கூறுகையில், “‘மிர்சா போன்ற நபர்களை மாநகராட்சி ஊக்குவிப்பது தவறானது. தியா மிர்சா தீபாவளி குறித்து ட்வீட் செய்துள்ளார். ஆனால் ஈத், மொஹரம் அல்லது பக்ரீத் பண்டிகைகளின்போது அவர் ஒருபோதும் ட்வீட் செய்வதோ அல்லது இது போன்ற அறிவுரைகளை வழங்குவதோ இல்லை. அவர்கள் ஹோலி அல்லது தீபாவளியை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கொண்டாட வேண்டும் என்று மட்டுமே பேசுகிறார்கள்.
அவர்கள் ரமலான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கொண்டாட வேண்டும் என்று பேச வேண்டும். அவரைப் போன்றவர்கள் சனாதன இந்து மதத்திற்கு எதிரானவர்கள். எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பது குறித்து நான் முதலமைச்சரிடம் பேசுவேன்” என்று அவர் கூறினார். இதற்கிடையே இந்த பட்டாசு விழிப்புணர்வு பிரசார வீடியோவிற்கு தான் பணம் வாங்கியதில்லை தியா மிர்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”யாருக்குப் பெரிய தொகைகள் வழங்கப்பட்டன என்பது எனக்குத் தெரியவில்லை. உண்மை என்னவென்றால், எளிதில் தீர்க்கக்கூடிய மாசுபாட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால், பொதுமக்கள் மற்றும் அரசாங்கங்களுடனும் இணைந்து பணியாற்றப் பிரபலங்கள் தயாராகவே உள்ளனர். பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கும் போதெல்லாம், நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறோம்.” என்று தெரிவித்தார்.