ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி.. 40 சொகுசு வில்லாக்கள்.. அதே நிறுவனத்துக்கே வாடகை.. பின்னணியில் என்ன நடந்தது? | IAS-IPS Couple, 40 Luxury Villas Leased Back to Same Company: What Happened Behind the Deal?

Spread the love

India

oi-Hema Vandhana

ஜெய்ப்பூர்: ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து சொகுசு வில்லாக்களை வாங்கிய அரசு உயர் அதிகாரிகள், அதே நிறுவனத்திற்கே அவற்றை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த விவகாரம் கடந்த 2 நாட்களாகவே ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி தொடர்பான இந்த விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

ராஜஸ்தான் முன்னாள் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிகர் அகர்வால், அவரது மனைவி பிரஷாகா மாத்தூர் ஆகியோரது குடும்பத்தினர், அனந்தா ரிசார்ட்ஸ் நடத்தும் கோயல் பேஷன் நிறுவனத்திடமிருந்து 40 சொகுசு வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கியிருக்கிறார்கள்.

IAS IPS Couple Rajasthan ACB Probe Luxury Villas Deal

கைமாறிய உடனேயே வாடகை ஒப்பந்தம்

சந்தை விலையைவிட குறைவாக வாங்கிய இந்த சொத்துக்களை மீண்டும் அதே நிறுவனத்திற்கே விட்டுள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 கோடி வாடகை கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 40 சொத்துக்களில் 20 காட்டேஜ்கள் உதய்பூர் புஜ்தா பகுதியில் 2023 செப்டம்பரிலும், 20 வில்லாக்கள் அல்வார் அஜாப்கர் பகுதியில் 2026 மார்ச் மாதத்திலும் வாங்கப்பட்டுள்ளன. இவற்றுக்காக மொத்தம் ரூ.6.16 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்தினர் பெயரில்

ஷிகர் அகர்வால், அவரது மனைவி ஆகியோர் தலா 10 காட்டேஜ்களை வாங்கியுள்ளனர். அல்வாரில் 2 பேரின் பெயர்களிலும் தலா 4 வில்லாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல 2 மகன்கள் பெயரில் தலா 4 வில்லாக்களும், பிரஷாகா மாத்தூரின் பெற்றோர் பெயரில் தலா 2 வில்லாக்களும் வாங்கப்பட்டுள்ளன. மகன்கள் சார்பில் பிரஷாகா மாத்தூர் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

சொத்து முரண்பாடு

2026 ஜனவரி 7-ம் தேதி தாக்கல் செய்த சொத்து கணக்கில் ஷிகர் அகர்வால் 14 சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள் அவரது மனைவி தாக்கல் செய்த கணக்கில் தனக்கு சொத்துக்கள் இல்லை என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் பெயரில் 40 சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

அடுத்தடுத்து ஆக்‌ஷன்

இந்த நிறுவனத்திற்கு ரிசார்ட் கட்ட அனுமதி கொடுப்பதில் விதிமுறைகள் மீறப்பட்டதா, தேவையான சான்றிதழ்களை வாங்காமலேயே அனுமதி கொடுத்தார்களா, அரசு தரப்பில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அக்டோபர் 29-ம் தேதியே ஷிகர் அகர்வால் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அக்டோபர் 31-ம் தேதி அவரது மனைவி பிரஷாகா மாத்தூரும் கூடுதல் டிஜிபி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். 2 பேரும் இப்போது காத்திருப்போர் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது…!!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *