கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – Kumudam

Spread the love

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நேற்று முன்தினம் (அக்.31) தங்கம் விலை திடீரென குறைந்தது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *