ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்29) நடைபெற்ற மும்பை vs ஹைதராபாத் போட்டியில் மும்பை நிர்ணயித்த 244 என்ற இலக்கை 8 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது ஹைதராபாத் அணி.
இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “ஆரம்பத்தில் இந்த இலக்கை எட்டுவது கடினம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால், எங்களுடைய பேட்டிங் வரிசையையும், ஆடுகளத்தின் தன்மையையும் பார்த்தபோது, இது சாத்தியம்தான் என்ற நம்பிக்கை வந்தது. சில விஷயங்கள் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது.
இந்த ஸ்கோர் நிச்சயம் துரத்தக்கூடிய ஒன்றுதான். எங்களின் தொடக்க ஆட்டகாரர்களின் பேட்டிங்கை பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நல்ல பிட்ச் கிடைத்துவிட்டால், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிதறடிக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், அவர்களுக்கு எதிராக நான் பந்துவீசவில்லை என்பது வரை எனக்கு நிம்மதிதான். அந்த அளவுக்கு அவர்கள் பவுலர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.