ஐ.பி.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் மிகப்பெரிய அளவில் விளையாடி வருகின்றனர். நடப்பாண்டில் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் இரண்டாவது முறையாக பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றியது. போட்டிகளில் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் மிகப்பெரிய தொகை கொடுத்து ஏலம் எடுக்கிறது.
ஏலத்தில் பங்கேற்ற பிறகு வீரர்கள் காயம் காரணம் தவிர்த்து போட்டியில் விளையாடமல் விலகினால், அந்த வீரருக்கு 2 ஆண்டுகள் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. இந்த சீசனில் பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் போன்றோர் பாதி போட்டிகளில் அதாவது முதல் ஏழு போட்டிகளில் விளையாடவில்லை. மிட்செல் ஸ்டார்க் விளையாடாதது டெல்லி அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சாம் கரன் இடம்பிடித்திருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அணியில் இருந்து காயம் காரணமாக விலகினார். ஆனால், இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடினார். இதனால் அணி நிர்வாகத்தினர் வெளிநாட்டு வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ஆனால் இது வெளிநாட்டு வீரர்களுக்கும் அணிகளுக்கும் இடையிலான விவகாரம். இதில் தலையிடுவதற்கான திட்டம் இல்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் இந்த அறிவிப்பால் ஐபிஎல் அணியில் வெளிநாட்டு வீரர்கள் தடை விதிப்பதில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.

