“எங்கள் மகிழ்ச்சி எங்கள் வீட்டின் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்,” என்று சித்தேஷ்வரின் மூத்த சகோதரர் அனுப் பேத்கர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நாண்டெட்டை சுற்றியுள்ள கிராமங்களில் விபத்து மரணங்கள் மிக அதிக அளவில் நிகழ்கின்றன. இந்தத் திருமணம் வெறும் நினைவுகளை மட்டுமல்லாமல், ஒரு பாதுகாப்பையும் விட்டுச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்” என்று குறிப்பிட்டார்.
இந்தச் செயலைப் பற்றிய செய்தி அந்தத் தாலுகா முழுவதும் பரவியது. இதன் விளைவாக, 4,500 விருந்தினர்களுடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட திருமணத்திற்கு அதைவிட அதிக விருந்தினர்கள் வந்திருந்தனர்.
இது குறித்து பஞ்சாயத்து தலைவர் பாலிராம் கூறுகையில், “‘இந்தத் தனித்துவமான செயல், இப்பிராந்தியத்திலேயே ஒருவேளை அதற்கும் அப்பாலும் கூட இதுவே முதல் முறையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
திருமணங்களில் மக்கள் இனிப்புகளையும் நினைவுப் பரிசுகளையும் பரிமாறிக்கொள்வது வழக்கம். ஆனால் இங்கே, ஒரு குடும்பம் பாதுகாப்பையே கையளித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
இத்திருமணத்தை ஒட்டுமொத்த கிராமும் சேர்ந்து கொண்டாடியது. இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் கூறுகையில், “இது ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக அமைந்திருந்தது. இந்தச் செயல் உண்மையிலேயே மறக்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டது. இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒன்றை யாரும் பார்த்ததே இல்லை,” என்று கூறினார்.