ரிஷப ராசிக்கு லாபஸ்தானத்தைப் பார்க்கப் போகிறார் குரு பகவான்|2026 gurupeyarchi rishapa rasipalan

Spread the love

உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) வருகிற ஜூன் 2 முதல் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். அவரின் பார்வை பல நன்மைகளைத் தரப்போகிறது உங்களுக்கு! தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும்.

1. குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

2. குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், பூர்விகச் சொத்துக்கள் சேரும். பண வரவால் பழைய கடன் பைசலாகும். மகளுக்கு, உங்கள் வசதிக்கும் அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் அமைவார்.

3. குருபகவான் 11-ம் இடத்தைப் பார்ப்பதால், வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். காரியத் தடைகள் விலகும். வி.ஐபிகள் அறிமுகமாவார்கள். சொத்துப்பிரச்னைகள் தீர்வுக்கு வரும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.

4. குரு பகவான் முயற்சி ஸ்தானத்திற்கு வருவதால், நீங்கள் சில காரியங்களைச் சின்னச் சின்ன தடைகளுக்கு நடுவே முடிக்கவேண்டி வரும். எந்தவொரு விஷயத்திற்கும் இரண்டு திட்டங்களை – யோசனையை வைத்துக்கொள்ளுங்கள். ஒன்று சறுக்கினாலும் இரண்டாவது கைகொடுக்கும்.

குருபகவான்

குருபகவான்

5. குடும்பத்தில் சகோதர, சகோகதரிகளிடையே கருத்துமோதல்கள் வரும். பாகப்பிரிவினையில் சிக்கல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். நெருங்கியவராக இருந்தாலும், அவரிடம் குடும்ப ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

6. ஜூன் மாதம் பிற்பகுதி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரப்படி, திடீர் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சொத்து வாங்குவீர்கள். மனக்குழப்பங்கள் விலகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

7. அக்டோபர் மாதத்திலும் அடுத்த வருடம் பிப்ரவரிக்குப் பிறகு ஜூன் வரையிலும் பணவரவு அதிகரிக்கும். வீடு- மனை வாங்குவீர்கள்; வழக்குகள் வெற்றி அடையும்.

8. இந்த வருடம் இறுதியில் சிற்சில காரியத்தடைகள் ஏற்படலாம். விரயச் செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் – வாங்கலில் கவனம் தேவை.

9. வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்த்தெறிந்து லாபம் ஈட்டுவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். திடீர் லாபங்களால் திக்குமுக்காடுவீர்கள். ஒருசிலர் கடையை மாற்றும் சூழல் எழலாம். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். ஸ்டேஷனரி, ஹோட்டல், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

10. உத்தியோகத்தில், புது பொறுப்புகள் தேடி வரும். எனினும் மேலதிகாரியுடன் அனுசரித்துப் போவது நல்லது. சில பணிகளை ஒன்றுக்கு இரண்டு முறை அலைந்துதிரிந்து முடிக்கவேண்டியது வரும். திடீர் இடமாற்றம் வரும்.

11. கணினித் துறையினருக்குப் புது வாய்ப்புகள் வந்துபோகும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினர், வீண் விமர்சனங்களைத் தவிர்க்கப்பாருங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *