ஒயிலாட்டக் கலைஞர் ‘சங்கமம்’ கனகராஜ் மறைவு – ஒயிலாட்டம் ஆடியபடி வழியனுப்பிய நாட்டுப்புறக் கலைஞர்கள்!

Spread the love

தொடர்ந்து, அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது, தங்களுக்குக் கலை கற்றுக்கொடுத்த ஆசானுக்குப் பிரியாவிடை கொடுக்கும் விதமாக, நூற்றுக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்களும், மாணவர்களும் ஒரே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்து, ‘சங்கமம்’ திரைப்படப் பாடல் இசைக்கப்பட, கண்ணீருடன் ஒயிலாட்டம் ஆடியபடியே இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து, தங்களது அன்பிற்குரிய ஆசானுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர். கலைக்காகவே வாழ்ந்து, இறுதி மூச்சு வரை கலைப் பணியிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கனகராஜின் மறைவு, நாட்டுப்புறக் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் கலைஞர்கள் தெரிவித்தனர்.

கனகராஜ் இறுதி ஊர்வலம்

கனகராஜ் இறுதி ஊர்வலம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *