மும்பையின் கட்கோபர் கிழக்குத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பராக் ஷா, ரூ. 5,000 கோடி சொத்து மதிப்பு கொண்ட இந்தியாவின் மிகப்பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர்.
பராக் ஷாவின் ஆன்மீக குரு, ஜைன மதத்தைப் பின்பற்றும் நம்ரமுனி மகராஜ். இவர் பராக் ஷாவுக்கு `சாதாரண மனிதர்கள் தினமும் சந்திக்கும் வாழ்க்கையின் கடினமான உண்மைகளையும் துன்பங்களையும் நேரடியாக உணர்ந்து கொள்வதற்காக, ஒரு நாள் பிச்சைக்காரராக வாழும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.
அதை ஏற்றுக்கொண்ட பராக் ஷா ஒருநாள், பணம் தரக்கூடிய அனைத்து ஆடம்பர வசதிகளையும், பாதுகாப்புகளையும் துறந்து ஒரு நாள் பிச்சைக்காரராக வலம் வந்திருக்கிறார்.

தெருக்களில் பிச்சை எடுத்து, அலைந்து திரிந்து, கடுமையான உடலுழைப்பையும், பொதுமக்களின் அவமதிப்புகளையும் அவர் சந்தித்திருக்கிறார்.
இது தொடர்பாக பராக் ஷா பேசும்போது, “என் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ஏழை பிச்சைக்காரர் போல உருமாறி கட்கோபர் தெருக்களில் இறங்கினேன். அங்கு பிச்சை எடுத்தும், தெருவிலேயே சாப்பிட்டும், ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கையில் இருக்கும் உண்மையான வலியையும் அவமானத்தையும் அனுபவித்தேன்.