கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பது குறித்து சி.ஜே.பி-யின் நிறுவனர் அபிஜித் தீப்கே, “இதுதான் ஜனநாயகம். அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் சும்மா போக மாட்டோம்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்.
அந்த குடும்பங்கள் அனைத்துக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இரண்டாவதாக, கடந்த 20-ம் தேதி அராஜகம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அந்த போலிஸ் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், “காக்ரோச்’ உடன் மோதாதீர்கள்.”