தர்மேந்திர பிரதான் ராஜினாமா: ‘ஜனநாயகத்தின் வெற்றி’ என சோனம் வாங்சுக் பாராட்டு – Kumudam

Spread the love

தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட்-யுஜி வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டங்களின் பின்னணியில் பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சோனம் வாங்சுக் வெளியிட்ட அறிக்கையில், “இது ஜனநாயகத்தின் வெற்றி. அமைதி, பொறுமை மற்றும் விடாமுயற்சியின் வெற்றி. நாட்டின் Gen Z தலைமுறைக்கும், அச்சத்தைத் துறந்து போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொறுப்புக்கூறலில் இருந்து தற்போது கல்வி சீர்திருத்தங்களை நோக்கி நகர வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களிடம் சென்றதும், அங்கு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தை முன்னெடுத்து வந்த சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கே, “நாம் அதைச் செய்துவிட்டோம். இது ஒரு பெரிய வெற்றி. நாடு அரசியலமைப்பின்படி ஆளப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. இது வெறும் தொடக்கம்தான்” எனத் தெரிவித்தார்.

மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தின் முந்தைய கருத்தைத் தொடர்ந்து உருவான இயக்கமே இந்தப் போராட்டத்துக்கு அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *