‘ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்; வேறு வழியின்றி TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்’- ஸ்டாலின் | stalin about tvk kalla kurichi mla arul vignesh arrest

Spread the love

மாவட்ட பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக வெடித்த விவகாரம், விஜய் தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. நீதிமன்றம் வரை சென்ற இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியும் புகாரளித்து, தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தார்.

இன்று மாலை தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷின் வீட்டுக்கு முன்பு குவிந்திருந்த அக்கட்சித் தொண்டர்களை, காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இந்தக் கைது குறித்து பதிவிட்டிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது! ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.

அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 116 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *