ஒரு லட்சம் டூ 10 லட்சம்… தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸில் முதலீடு செய்தால் இவ்வளவு லாபமா? விவரம் | What are the benefits of investing in the Tamil Nadu Government’s Power Finance deposit scheme?

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் வைப்புத் தொகையில் 10 லட்சம் ரூபாய் போட்டால் 60 மாதங்களில் 10.46% வட்டி முதியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இதன்படி பார்த்தால், 10 லட்சம் போட்டவர்களுக்கு ஐந்து ஆண்டு முடிவில் மொத்த முதிர்வுத் தொகை ₹15,22,968 (அசல் ₹10,00,000 + வட்டி ₹5,22,968) ஆகும்.. இல்லை தம்பி , மாதம் மாதம் எனக்கு வட்டி ஒன்றாம் தேதி டான் என்று விழுகணும் என்றால், ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் போட்டவர்களின் வங்கி கணக்கில் ₹6,667 (தோராயமாக) கிடைக்கும். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

பலரும் தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்துவிட்டு, அவர்கள் அதிக வட்டி தருவார்கள் என்கிற ஆசையில் ஏமாந்துவிடுகிறார்கள். இதனா்் பலர் சேமிப்புத் தொகையை எங்கு முதலீடு செய்தால் பாதுகாப்பாகவும், அதே சமயம் வங்கி எஃப்.டி-களை விட அதிக வட்டியும் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே இருப்பார்கள்.

What are the benefits of investing in the Tamil Nadu Government s Power Finance deposit scheme

அவர்களுக்கான அறிவிப்பு தான் இந்த செய்தி. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்’ வழங்கும் வைப்புத் தொகைத் திட்டங்கள் சாமானிய முதலீட்டாளர்களுக்கு மிக சிறந்த தேர்வாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறாக்ரள்..

தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் வைப்புத்தொகை திட்டம் குறித்த முக்கிய அம்சங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் முதலீட்டு முறைகளை விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் நிறுவனம் என்பது தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம்: இது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசு நிறுவனம் என்பதால், உங்கள் முதலீட்டுக்கு நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் அதிகம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

குறைந்தபட்ச முதலீடு:

நான்-குமுலேட்டிவ் (Non-Cumulative – மாத/காலாண்டு/ஆண்டு வட்டி பெறும் முறை): குறைந்தபட்சம் ₹1,00,000 தொடங்கி அதன் பிறகு ₹1,000-ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

குமுலேட்டிவ் (Cumulative – முதிர்வு காலத்தில் மொத்தமாகப் பெறும் முறை): குறைந்தபட்சம் ₹50,000 (அதன் பிறகு ₹1,000-ன் மடங்குகளில் செலுத்தலாம்).

கூடுதல் வட்டி: மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) வழக்கமான வட்டி விகிதத்தை விட கூடுதலாக வட்டி வழங்கப்படுகிறது.

வட்டி விகிதங்கள் (24-08-2026 முதல் அமலில் உள்ளது)

குமுலேட்டிவ் திட்டம் (Cumulative Deposit – முதிர்வின் போது மொத்த வட்டி):
இத்திட்டத்தில் வட்டி கூட்டு வட்டியாக சேர்க்கப்பட்டு, முதிர்வு காலத்தில் அசல் + வட்டியாகப் பெறலாம்.

பொதுப் பிரிவினருக்கு 12 மாத கால வைப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் 7.55% வட்டி விகிதம் வழங்கப்படும். இதற்கான கூட்டு வட்டி முறையிலான ஆண்டு சராசரி பலன் 7.77% ஆக இருக்கும. இதையே மூத்த குடிமக்கள் முதலீடு செய்யும்போது, அவர்களுக்கு ஆண்டு வட்டி விகிதம் 7.70% ஆகவும், அதன் கூட்டு வட்டிச் சராசரி பலன் 7.93% ஆகவும் உயர்ந்து கிடைக்கும். 60 மாதங்கள் (5 ஆண்டுகள்) முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு முதிர்வு காலத்தில் வட்டி பலன் (Effective Yield) 10.46% வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மாதங்கள் (2 ஆண்டுகள்) வைப்புத் தொகை

24 மாதங்களுக்குப் பொதுப் பிரிவினர் முதலீடு செய்யும்போது 7.85% ஆண்டு வட்டி விகிதம் வழங்கப்படும்; இதன் கூட்டு வட்டிச் சராசரி பலன் 8.18% ஆகும். மூத்த குடிமக்களுக்கு 8.00% ஆண்டு வட்டி வழங்கப்பட்டு, அதன் கூட்டு வட்டிச் சராசரி பலன் 8.35% ஆகக் கிடைக்கிறது.

36 மாதங்கள் (3 ஆண்டுகள்) வைப்புத் தொகை

36 மாத கால அளவுக்குப் பொதுப் பிரிவினருக்கு ஆண்டுக்கு 8.25% வட்டி கணக்கிடப்பட்டு, அதன் கூட்டு வட்டிச் சராசரி பலன் 8.83% ஆகக் கிடைக்கிறது. அதேவேளையில் மூத்த குடிமக்களுக்கு 8.35% ஆண்டு வட்டி அளிக்கப்பட்டு, அதன் கூட்டு வட்டிச் சராசரி பலன் 8.96% ஆக உயர்கிறது.

48 மாதங்கள் (4 ஆண்டுகள்) வைப்புத் தொகை

48 மாத கால முதலீட்டிற்கும் பொதுப் பிரிவினருக்கு ஆண்டுக்கு 8.25% வட்டி விகிதம் தொடர்கிறது; ஆனால் கூட்டு வட்டி சேர்ந்து இதன் சராசரி பலன் 9.12% ஆக அதிகரிக்கிறது. மூத்த குடிமக்களுக்கு 8.35% ஆண்டு வட்டி விகிதத்தில், கூட்டு வட்டிச் சராசரி பலன் 9.26% ஆகக் கிடைக்கிறது.

60 மாதங்கள் (5 ஆண்டுகள்) வைப்புத் தொகை

நீண்ட கால அளவான 60 மாதங்களுக்கு முதலீடு செய்யும்போது, பொதுப் பிரிவினருக்கு ஆண்டுக்கு 8.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதன் கூட்டு வட்டிச் சராசரி பலன் 9.72% ஆகும். இத்திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 8.50% அடிப்படை ஆண்டு வட்டி விகிதமே வழங்கப்பட்டாலும், கூட்டு வட்டி முறையின் மூலம் 5 ஆண்டுகள் முடிவில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆண்டு சராசரி பலன் (Effective Yield) 10.46% கிடைக்கும்.

நான்-குமுலேட்டிவ் திட்டம் (Non-Cumulative Deposit – வழக்கமான வட்டி):

மாதாந்திரம், காலாண்டு அல்லது ஆண்டுதோறும் நிலையான வருமானம் (Pension போல) பெற விரும்புபவர்களுக்கு இது ஏற்றது.

மாதாந்திர வட்டி கொடுப்பனவு: ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும்.

36 முதல் 60 மாதங்கள் கால அளவு:

பொதுப் பிரிவு: 8.00% முதல் 8.25% வரை வட்டி.

மூத்த குடிமக்கள்: 8.00% முதல் 8.50% வரை வட்டி.

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது.

KYC அவசியம்: ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களின்படி, அனைத்து முதலீட்டாளர்களும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார், பான் கார்டு போன்ற KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

TDS பிடித்தம்: வருமான வரி விதிப்புகளின்படி, குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வட்டி வருமானம் இருந்தால் வருமான வரி (TDS) பிடிக்கப்படும். (படிவம் 15G/15H சமர்ப்பித்து வரி விலக்கு பெறலாம்).

வங்கிப் பரிவர்த்தனை: முதிர்வுத் தொகை மற்றும் வட்டிக் தொகைகள் NEFT/RTGS மூலம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.

நாமினேஷன் வசதி: உங்கள் வைப்புத் தொகைக்கு வாரிசுதாரரை நியமிக்கும் வசதி உள்ளது.

அவசரகால அவசரப் பணம் திரட்டுதல்: முதலீடு செய்து 3 மாதங்களுக்குப் பிறகு, மருத்துவச் செலவு போன்ற அவசரத் தேவைகளுக்காக விதிகளுக்கு உட்பட்டு பகுதித் தொகையைப் திரும்பப் பெறவோ அல்லது கடனாகப் பெறவோ வசதி இருக்கிறது.

யார் எதில் முதலீடு செய்யலாம்?

ஓய்வூதியதாரர்கள் & மூத்த குடிமக்களை பொறுத்தவரை மாதாந்திர வட்டித் திட்டத்தைப் தேர்வு செய்து, வழக்கமான நிலையான வருமானத்தைப் பெறலாம். மாதம் ஒன்றாம் தேதி ஆனால் வட்டி சரியாக அக்கவுண்டில் வரவு வைப்பார்கள். உங்களிடம் 10 லட்சம் இருந்தால்,மாதம் ₹6,667 தாராளமாக கிடைக்கும்.

பாதுகாப்பான சேமிப்பை விரும்புவோருக்கு சிறந்த திட்டம். பங்குச்சந்தை அபாயங்கள் இன்றி, நிலையான மற்றும் அதிக வட்டி வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.

தம்பி எனக்கு உடனே வேண்டாம்.. 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணத்தைச் சேமித்து, முதிர்வில் நல்ல தொகையைப் பெற ஆசை என்கிறீர்களா.. நீங்கள் குமுலேட்டிவ் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பப் படிவம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு www.tnpowerfinance.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *