நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், திரையுலகில் நானியின் 16 ஆண்டுகாலப் போராட்டம் குறித்து அவரின் மனைவி அஞ்சனா எலவர்த்தி சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், “திரையுலகில் 16 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதுடன், ‘தி பாரடைஸ்’ திரைப்படம் திரைக்கு வந்துள்ள இந்தத் தருணத்தில் எனது மனம் உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது.
உதவி இயக்குநராகத் தொடங்கி, இன்று ஒரு நடிகராக இத்தனை கோடிக்கணக்கான மக்களின் அன்பைப் பெற்றிருப்பது சாதாரண விஷயம் அல்ல.