தங்கம் விலை சரிவு
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,08,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ₹1,680 என அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,06,800 என்ற நிலைக்கு வந்துள்ளது. அதேபோல், கிராமுக்கு ₹210 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையும் கணிசமாகக் குறைவு
தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளி விலையும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 வரை சரிந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருவது நடுத்தர மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.



